520 அருப்புக்கோட்டை நகராண்மைக் கழகமும் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி என்ற நான்கு ஊராட்சி ஒன்றியங்களும் இவ்வட்டத் திலுள். அருப்புக்கோட்டை நகர் 1948-இல் நகராண்மைக் கழகம் ஏற்பட்டது. 60,000 மக்கள் வாழ்கின்றனர். மதுரை 48 கி.மீ. எட்டைய புரம் 55,தூத்துக்குடி 86,விருதுநகர் 16, திருச்சுழி 13. விருதுநகர் - மானாமதுரை சந்திப்புக் களுக்கிடையே இதுவே முக்கியமான இரயில் நிலையம். வட்டத் தலை நகர். சுப்பிரமணிய சுவாமி கோவிலும், தோற்றப்பொலி வுடன் கூடிய நாடார் சிவன் கோவிலும் உள்ளன. மாரி யம்மன் கோவில் தொடர்பாய் 1940-இல் தேவாங்கர்க் கும் நாடார்களுக்குமிடையே கலகம் ஏற்பட்டு, அரசினர் தண்ட வரி வசூலித்தனர். மணிலாக்கடலை, கருப்பட்டி, நல்லெண்ணெய் வியாபாரங்கள் பெரிய அளவில் நடை பெறுகின்றன. தேவாங்கராலும் சாலியராலும் நெசவுத்துறையில் இந் நகர் புகழ் பெற்றிருக்கிறது. வேட்டிகளும் சேலைகளும் இங்கிருந்து அசாமுக்கும் ஒரிசாவுக்கும் நெடுங்காலமாக விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. நெசவாளர் குடி யிருப்புக்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. தளவாய் அரியநாதர் இங்கு ஒரு கோட்டை கட்டி யிருந்தார் என்பர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 73,000 மக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மைச் சமூகமாக மறவரும், முன்னேற்றம் பெற்றவர்களாக
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/522
Appearance