$21 நாயுடுக்களும் ரெட்டியார்களும் உள்ளனர். ஊராட்சி மன்றங்கள் 32. காடு, மலை இல்லை. மதுரை, கமுதி, எட்டையபுரம், தூத்துக்குடி, விருது நகர் ஆகிய நகர்களுக்கு இவ்வொன்றியத்திலிருந்து. அடிக்கடி பஸ்கள் செல்லுகின்றன. சில ஊர்களில் குட்டநோய் பரவியிருக்கிறது. குட்ட நோய் மருத்துவ மனைகளை அரசு அமைத்திருக்கிறது. ― ஆத்துப்பட்டி: திருச்சுழி அருப்புக் கோட்டைச் சாலையில் இருக்கிறது. இங்கிருந்து கமுதி முதுகுளத்தூர் சாயல்குடி ஆகிய ஊர்களுக்குச் செல்ல ஒரு சாலை பிரி கிறது. நூலாலை ஏற்பட்டிருக்கிறது. பயிர்கள் - பருத்தி. கடலை. ஆமணக்க நத்தம்: இங்கு அவுரிச்செடி பயிரிடப் பெற்று, தூத்துக்குடியிலிருந்து ஏற்று மதியாகிறது. கஞ்சநாயக்கன் பட்டி: புன்செய் வேளாண்மையில் சிறந்த சிற்றூர். அருப்புக் கோட்டை நகர் ஓரமாக அமைந்தது. வைக்கோலும் கழிவுத் தாள்களையும் கொண்டு அட்டை செய்யும் தொழிற்சாலை நடைபெறு கிறது. கள்ளிக்குடி: மதுரைச் சாலையில் உள்ளது. சின்னக் கூடக் கோவில் புகழ் பெற்றது. குல்லூர்ச் சந்தை: விருதுநகர்க்கு அருகு, தறிநெச வாளரான தேவாங்கரால் பிரபலமானது. பந்தல்குடி: எட்டையபுரம் சாலையில் அமைந்தது. அருப்புக் கோட்டையிலிருந்து 13 கி.மீ. விளைபொருள் கள் - பருத்தி, துவரை, உளுந்து, பருத்தி அறைக்கும் ஆலைகளும் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளன. இ.33
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/523
Appearance