உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 ஏற்படுத்தப்பட்டுத் தனித்தாசில்தார் தலைமையில் யங்கிவருகிறது. வணிகத்துறையில் நாடார்கள் சிறந்து விளங்குகின்றனர், பாசன வசதி போதியதாக இல்லை. நெல்லும் புன்செய்ப்பயிர்களும் பூசனிக்காயும் முக்கிய விளைபொருள்களாம். . பிரளய விடங்கர் கோயிலும், பழநிக்குமாரசாமி கோயிலும், தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயமும், மண்வளப் பாதுகாப்பு அலுவலகமும், 1862 முதல் ஆவணக் களரியும் உள்ளன. புலியூரான்: (2,500) திருச்சுழியலுக்கு மேற்கே 6 கி.மீ. தொலைவு. ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் இவ்வூர்ச் சித்தநாதன் கோயிலுக்கு மக்கள் செல்லுவர். வயற்காட்டில் புத்தர் விக்கிரகம் இருக்கிறது. இறைக்க இறைக்க வற்றாத கிணறு ஒன்று உளது. முத்துராமலிங்கபுரம்: சேதுபதிகள் பெயரால் ஏற் பட்ட ஊர்களுள் இதுவும் ஒன்று. இங்கு ரெட்டியார் சமூகத்தார் செல்வாக்கு மிகுதி. குலசேகரநல்லூர்: குலசேகர பாண்டியன் கட்டிய பிள்ளையார் கோயிலும், பிரதிட்டை செய்த சிவலிங்கமும் வெட்டிய கல்வெட்டுக்களும் இங்கு உள்திருச்சுழியி லிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் 8-வது கிலோ மீட்டரில் இவ்வூர் இருக்கிறது. இவ்வூர்க்கு அருகே முதுகுளத்தூர்ப் பகுதிக்கு ஒரு சாலை பிரிகிறது. பரளச்சி: இது ஒரு பிர்க்காவின் தலைநகர். மேலை யூர்க்கும் பரளச்சிக்கும் இடையேயுள்ள பரளச்சிக் கண்மாய் இவ் வட்டத்தின் பெரிய கண்மாய்களுள் ஒன் றாகும். தமிழ்ப்பாடி: தமுக்காடி எனத் தவறாக வழங்கும் இவ்வூர் திருச்சுழியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்