உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

501 திருக்கிறது. மாணிக்கவாசகர் இவ்வழியே திருவாதவூரி லிருந்து உத்தரகோச மங்கைக்குச் சென்றார் என்பர். கீழைக்கண்ட மங்கலம்: ஓர் கண்மாயின் உள்வாயில் உளது. . பண்ணை மூன்றடைப்பு: வளமான ஊர். வாழை, கரும்பு, கொடிக்கால் வேளாண்மை மிகுதி. பாலையம் பட்டிக் குறுநில மன்னரின் பண்ணைகள் இங்கு உள. கிருஷ்ணாபுரம்: பெருஞ்சாளி புதுப்பட்டியிலிருந்து 3 கி. மீ. தொலைவு. கிருஷ்ணப்ப நாயக்கர் கட்டிய பெருமாள் கோவிலையொட்டி ரெட்டியார்கள் குடியேறி உண்டான ஊர். பள்ளிமடம்: திருச்சுழிக்கு எதிரே, குண்டாற்றின் மறுகரையில் உள்ள சிற்றூர். இராமநாதபுரம் சமஸ் தானத்தின் பிரிவாக பள்ளி மடம் என்ற தாலுகா இருந்து வந்தது. ஆற்றங்கரையில் காளையார்கோவில் நினைவாகக் காளைநாதர் சொர்ணவல்லி அம்மன் கோவில்கள் நெடுங்காலமாக உள்ளன். சமணர் பள்ளி ஒன்று இங்கு இருந்ததாகக் கூறுவர். காட்டுக் காளையார் கோட்டை கோவில் என்ற பெயர் இவ்வூருக்கு உண்டு. ஒன்று இருந்ததன் அறிகுறிகள் காணப்படுகின்றன. பள்ளி மடம் என்பது பள்ளிபடை என்ற சொற் றொடரின் மரூஉ என எண்ணவேண்டியிருக்கிறது. காளை நாதர் கோவில் கல்வெட்டுகள் 10-ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவை. இவற்றிலிருந்து பள்ளி மடம், திருச்சுழியல் என்ற பெயருடன் பருத்திக்குடி நாட்டைச் சேர்ந்த ஒரு தேவதானமாக இருந்ததாகத் தெரிகிறது. காளை நாதர் கோவிலே, அக் கல்வெட்டுக்களில் குறிப் பிடப்படும் சுந்தர பாண்டிய ஈசீசுவரம் என்று கருதலாம். சுந்தர பாண்டியன் நினைவாக அவ்வீச்சுவரம் கட்டப்