பெற்றது உறுதி 532 ஆனால் அவன் ஓர் அரசனா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இறந்த அரசர்களை வழிபடு கடவுளராக மதித்து அவர்கள் சமாதியின்மீது சிவலிங் கத்தை வைத்துக் கோவில் எடுப்பது வழக்கம். பள்ளி படை என்ற சொல் இப்பொருள் தருகிறது. இத்தகைய கோவில்கள் சோழ மன்னர்களால் தங்கள் தந்தையார் களுக்கு திருக்காளத்தி (சித்தூர் மாவட்டம், ஆந்திரா) மேல்பாடி (சித்தூர் மாவட்டம், ஆந்திரா), இராமநாதன் கோவில் (கும்பகோணம் வட்டம்) ஆகிய ஊர்களுக்கு அருகே கட்டப்பட்டு அவையும் பள்ளிபடை என்ற பெய ருடன் நிலவுகின்றன. அரசுக் கட்டில் ஏறுமுன் இறந்த இளவரசர்கட்குப் பள்ளிபடை அமைக்கும் வழக்கம் இருந்திருக்கலாம். சுந்தர பாண்டியனைப் பற்றிச் சில கல்வெட்டுக்களும் சிவகாசிப் பட்டயங்களும் கூறுவதிலிருந்து இவன் பெரும் புலவன், அறிஞர்களின் உறைவிடம், துறவு உள்ளத் தினன் என்று தெரிகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் திருகானப்பேர் இறைவன் காளை வடிவத்துடன் காட்சியளித்தது இத் திருக் கோவிலிலேயே ஆகும். நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஒன்றாக இதைக் கூறலாம். இம்மாவட்டத்திலேயே பிற்பட்ட ஒன்றியங்களுள் உவர்மண் பகுதியாக இருக் கிறது. பாசன வசதிகள் மிகக் குறைவு. 1955-க்குப் பிறகே போக்கு வரத்து வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. திருச்சுழியிலிருந்து மானாமதுரை வரை இவ்வொன்றியம் பரவியது. இங்குப் பெரும்பான்மைச் சமூகமாக வாழ் பவர்கள் மறவர்கள் ஆவர். மணிலாக் கடலைதான் இப்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/534
Appearance