உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

533 பகுதியின் முக்கிய விளைபொருள். 47 ஊராட்சி மன்றங் கள் இதில் அடங்கியுள்ளன. ஒன்றியத்தின் அலுவலகம் நரிக்குடியில் இருக்கிறது இப்பகுதியிலுள்ள பல ஊர் களுக்கு முக்கியமான ஊர் திருப்பூவணம். நரிக்குடி: மானாமதுரையிலிருந்து 24 கி. மீ. (மேற்கே) திருச்சுழிக்குக் கிழக்கே 16 கி. மீ. தொலைவிலும் திருப்பூ வணத்திற்குத் தென்கிழக்கே 38 கி மீ. தொலைவிலும் ஒரு சிற்றாற்றின் கரையில் அமைந்த சிற்றூர். மக்கள் தொகை ஓராயிரம் இருக்கலாம். இவ்வூர் மருது பாண்டியர் தொடர்புடையது. அவர் நிறுவிய அன்னதான மருது விநாயகர் கோவிலும், அழகிய மீனாம்பிகை கோவிலும் பாண்டியன் கிணறும், சத்திரமும் இங்கு உள்ளன. சத்திரம் மருது பாண்டியரால் 1786-இல் ஏற்படுத் தப்பட்டு இன்றளவும் நடைபெற்று வருகிறது. என் றென்றும் தடைப்படாது இந்த அறம் நடைபெறுவதற் (1) நரிக்குடி,(2) ஆதித்தநேந்தல், (3) முக்குளம், (4) வீரக் குடி,(5) நாலூர், (6) நண்டு நாச்சி, (7) கருமான் ஏந்தல், (8) அத்திகுளம், (9) மானூர்,(10) தருமம்,(11) த.ஆலங் குளம், (12) மேலப் பசலை என்னும் 12 ஊர்களை மருது பாண்டியர் தானமாக வழங்கியுள்ளார். சத்திரத்திற்குள் ஒரு தர்ம தேவதை உள்ளது. இத் தேவதைக்கு முறையாகப் பூசைகள் செய்யப்படுகின்றன. மருது பாண்டியரிடம் அமைச்சர்களாக இருந்த சின்னச் சாமி, முத்தழகு ஆகியோரின் உருவச் சிலைகளும் சத்தி ரத்தில் உள்ளன. சத்திரத்தில் நாள்தோறும் ஆறு பேருக்கு அரிசி, உப்பு, பருப்பு, புளி, வற்றல் ஆகியவை வழங்கப்படு கின்றன. நரிக்குடி சத்திரத்து நிர்வாகிகள் முத்தனேந்