534 தல், பாம்பன் ஆகிய ஊர்களிலும் நாள்தோறும் இத் தகைய அன்னதானம் செய்து வருகின்றனர். வேனிற் காலத்தில் தண்ணீர்ப் பந்தர்களும் நடத்தி வருகின் றனர். மருது பாண்டியர்க்கு இவ்வூரில் திருவுருவம் எடுக்கப் பட்டு, குருபூசை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நரிக்குடியின் பெயர்க் காரணம் தெரியவில்லை. ஊர்ப் பெயர் பெருமை தருவதாயில்லை என்பதாலும் மருது பாண்டியர் தொடர்பு இருப்பதாலும் மருது பாண்டிய நகர் என்று நரிக்குடியின் பெயரை மாற்றவேண்டுமென ஊராட்சி மன்ற ஒன்றியத்தார் அரசினரை வேண்டி யுள்ளனர். வேட்டையாட மருது பாண்டியர் இங்கு வந்ததாகச் சிலரும், மருது பாண்டியரின் அரசியார் ஒருவர் இவ் வூரினரென்று பிறரும் கூறுவர். . ஆதித்தநேந்தல்: இவ்வூரில் மருதுபாண்டியர் நிறுவிய கஞ்சித்தொட்டி உளது. இது கல்லால் ஆனது. ஆனைக்குளம்: அருப்புக்கோட்டை வட்டத்திலேயே பெரிய குளம் ஆனைக்குளம். அளவு கருதி, யானையின் பெயர், குளத்திற்கு ஏற்பட்டது போலும். அந்த நீர் நிலையை யொட்டி உருவான ஊருக்கும் அதுவே பெய ராயிற்று. மானூர். இங்குள்ள சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்தரத்தன்று தேரோட்டமும், 7-ஆம் நாள் திருவிழா நரிக்குடியிலும் நடைபெறும். கண்டுகொண்டான் மாணிக்கம்: மாணிக்க வணிகர் ஒருவர் இங்கு மறதியாக வைத்துவிட்டுச் சென்ற
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/536
Appearance