உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339 தேனமுத மான தமிழ்க் கானமொழி தானிசையச் சித்தாந்த வானந்தமாய் - பாடி முத்தாந்தப் பேரின்பமாய் - தாயு மானவர்தம் மோன நிலை தான்முகவை மாநகரில் பாருங்கள்! வாருங்க ளேன்! - களி கூருங்கள் தேறுங்களேன்!-உயர் வானதிரு வாசகமு ரைத்தமணி - வாசனைப் - பாடுங்கள்! பாடுங்க ளேன்-பொன்னூசல் ஆடுங்களேன்! (வேறு) மாணிக்க வாசகர்க்கு மறையருள் புரிந்து மேலாம் ஆணிப்பொன் னூசல் ஆடி ஆட்கொண்ட வள்ளல் தன்னைக் காணக்கண் கோடி வேண்டும்! கைலையில் ஆதியென்னச் சேணுற்றுப் பொழில் நிறைந்து சிறந்துநின் றிலங்கு மெங்கள் உத்தர கோச மங்கை ஊர்புகழ் உரைக்கப் போமோ? சத்துடைத் தமிழ் கொணர்ந்து தந்தநற் புலவனுக்குச் செத்தபின் பொன்கொடுத்த செந்தமிழ்ச் சீதக்காதி உத்தமன் சேது நாட்டில் உறைவ தோர் உண்மை காணீர்?