உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 மாரிதான் பொய்திட்டாலும் வளர்தமிழ்ச் செழுமை கொண்ட வாரிபோல் வாரி வாரி வழங்கிய எங்கள் வள்ளல் பாரிதான் பிறந்து வாழ்ந்து பழந்தமிழ் பண்பைக் காத்த சீருயர் மாவட்டத் தின் சிறப்பினை மறப்பார் யாரே! காவிய நயங்க ளெல்லாம் கனிந்திடப் பாடுவார் செந் நாவுயர் யோகி சுத்த னந்தரும் - "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் அருந்தமிழ் நாட்டுப் பண்பின் ஆவியை அமுத மூச்சை அளித்ததும் எம்மின் வந்த கவிஞர்பூங் குன்றன்! ஞானக் கடல்மடை விவேகா நந்தர் தவப்புகழ் நாட்டின் சீர்த்த தத்துவச் சமய மாண்பை புவித்தலம் போற்று மாறு புத்துல கமெரிக் காவின் செவிப்புலம் பருகச் செய்த தெம்முயர் சேது மன்னன்! (Gay) முத்தமிழ்க்குச் சங்கம்வைத்து முறைவகுத்து மொழிவளர்த்த மூதூர் என்றே சித்தரித்த தென்மதுரைத் திருநகரில் திருக்குறளைத் தேடித் தேடி