உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வேளாண்மை மழை, மண் வளம், மக்கள் உழைப்பு மூன்றும் சேர்ந் தால் வேளாண்மை சிறக்கும். இராமநாதபுர மாவட்டத்தில் பல இடங்களில் ஓராண்டுக்கு 5 அங்குலம் அளவுதான் மழை பெய்கிறது. 20 அங்குலம் மழை பெய்யும் இடங்களும் உள்ளன. வை மிகவும் வளமான பகுதியாகக் கருதப்படுகின்றன மண்வளம் வட்டத்துக்கு வட்டம் மாறுபடுகிறது. பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானைப் பகுதிகளில் களர் நிலம் மிகுதி இங்கு, அமிலச்சத்து நிறைய இருக் கிறது. சிவகங்கை வட்டத்தில் வைகைப் பாசனம் நீங்கிய பகுதி செம்மண் சரளை நிலமாக உள்ளது. இங்கு முந்திரியைத்தான் பயிரிட இயலுகிறது. சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை வட்டங்கள் கரிசல் மண்பூமி அங்கே பருத்தி விளைந்து பொன் கொழிக் கிறது. அடிப்படை உரமோ வண்டலோ இம்மா வட்டத்து நிலங்களில் இல்லை. கடலோர வட்டங்கள் புயலாலும் கடலரிப்பாலும் பாதிக்கப்படுகின்றன. இந்த மாவட்டத்து மக்கள் தஞ்சை மாவட்டத் தையும் பர்மா நாட்டின் தென் பகுதியையும் தங்கள் உழைப்பால் வளப்படுத்தி அவற்றை வேளாண்மைச் செல்வம் செழிக்கும் பகுதிகளாக ஆக்கியுள்ளனர். எனினும் மழையின்மையாலும் மண்வளத்தின் குறை யாலும், இவர்கள் தங்கள் மாவட்டத்தை வளம்பெறச்