உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 செய்ய இயலாதவர்களாக உள்ளனர். இவ்வகையில் இவர்களை இராஜஸ்தான் மாநிலத்து மக்களுடன் ஒப்பிட லாம். . தமிழ்நாடு அரசினர் 1964-ஆம் ஆண்டளவில் வெளி யிட்ட விவரப்படி, ஓராண்டுக்கு வேளாண்மை வருமான வரியாக மதுரை மாவட்டத்தில் 12 லட்சம் ரூபாயும் ராமநாதபுர மாவட்டத்தில் 1 லட்சம் ரூபாயும் அரசி னர்க்குக் கிடைக்கிறது. இதிலிருந்து இம்மாவட்டத்தின் நிலையை அறிக. பெய்யும் மழையும் ஒரு சீராகவோ குறித்த காலத் திலோ பெய்வதில்லை. மழையை உறுதியாக நம்ப இயலா ததால், மழை பெய்த பிறகே நாற்றுப் பாவுவது வழக்கம். இவ்வாறு காலங்கடந்து நாற்றுப்பாவும் போது, சாகுபடி முடிவதற்குள் கண்மாய்களில் நீர் வற்றி விடுகிறது. கிணற்று வசதியிருந்து நாற்றுப்பாவி, மழை பெய்ததும் நடத் தொடங்குபவர்களுக்கு மட்டுமே வேளாண்மையில் வருவாய் கிடைக்கிறது. . மழை மிகுதியாகத் தேவைப்படாத பயிர்கள் பயிரி டப்படுகின்றன. இவையாவன மல்லி, மிளகாய் பருத்தி,வரகு, குதிரைவாலி முதலியன. இவ்வாறே ஈர மில்லாச் சூழலில் சிறக்கும் தீப்பெட்டித் தொழிற்சாலை களும் பட்டாசுத் தொழிற்சாலைகளும் இம்மாவட்டத் தில் பெரிய அளவில் உள்ளன. கிணறு திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூர் வட்டங்களில் பெரும்பாலும் உப்பு நீர்தான் கிடைக் கிறது. எனவே இங்கு, கிணறு வெட்டுவதற்கு வாய்ப்புக் குறைவாக உளகி.