65 சென்னை, விசாகப்பட்டினம், கல்கத்தா, கொல்லம், காக்கினாடா, பரங்கிப்பேட்டை, விஜயநகரம் ஆகிய டங்களில் உள்ளன. சார்டைன்ஸ், மக்கேரல், பட்டர்பிஷஸ், பிரான்சி. ஷெல்பிஷ், சீவீட்ஸ் ஆகிய மீனினங்கள் பற்றி ஆராய்ச்சி நடைபெறுகிறது. இந்தியக் கடல்மீன் அளங்களில் மீன் இன்னும் நிறையக் கிடைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆராய்கின்றனர். அதற்காகச் சயாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நடு களின் கடற்பகுதிகளில் அகப்படும் மீன்களை வழைத்து ஆராய்கின்றனர். வர மீன் எண்ணெய் செய்யும் தொழிற்சாலை ஒன்றை இங்கு அமைப்பது நலம். கடற்பாசியிலிருந்து உணவுப்பொருள்கள் செய்யும் முறையை இந்த ஆராய்ச்சி நிலையம் பரப்பிவருகிறது. சங்கெடுத்தல் சங்கெடுப்பது இம்மாவட்டத்தில் முக்கியமான ஒரு தொழிலாகும். மூவாயிரம்பேர் இதில் ஈடுபடுகின்றனர். சில நூறுபேர் ஹிந்துக்களும் கிறித்தவரும். ஏனையோர் முஸ்லீம்கள். இவர்களுக்குச் சம்பளம் அல்லது அகப் படும் சங்கில் பங்குகொடுத்து, இவர்களைக்கொண்டு தொழில் நடத்தும் முதலாளிகள் உள்ளனர். கீழக்கரை, பெரியபட்டினம், திருப்பாலக்குடி. மண்டபம், வெடலைப்பகுதி மீனவர் பருவகாலத்தில் தூத்துக்குடியில் சங்கு எடுக்கின்றனர். இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் சங்கு எடுப்பது பலநூற்றாண்டுகளாகச் சேதுபதிகளின் தனி உரிமையாக இருந்தது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/67
Appearance