உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 முத்துக்குளிக்கும் உரிமை பிரிட்டிஷாருக்கு மாறிய போதும், சங்கு எடுப்பது சேதுபதிகளிடமே இருந்தது. ஜமீன் ஒழிப்புக்குப்பிறகே, இவ்வுரிமை அரசினர்க்குக் கிடைத்தது. பட்டி, இருபிறவி, இராமேசுவரம் என்னும் மூவகைச் சங்குகள் இம்மாவட்டத்துக் கடற்பகுதிகளில் கிடைக்கின்றன. இந்தச் சங்குகளுக்கு வங்காளத்தில் நல்ல 'கிராக்கி' உண்டு. பூகம்பம் ஏற்பட்டால் சங்கு எடுத்துக்கொண்டு ஊதும் வழக்கம் வங்கப்பெண்களிடம் நிலவுகிறது. நோய் தீர்க்கும் ஆற்றல் சங்குக்கு உண்டு. அதனா லேயே பால், மருந்து முதலியனவற்றைத் தாய்மார்கள் சங்கில் ஊற்றிக் கொடுக்கின்றனர். இந்நாளில் மெத்தப் படித்தவர்கள்' கப் சாசரிலும், புதுப்பணக்காரர்கள்' வெள்ளி, தங்கம், முதலியவற்றாலான பொருள்களிலும் பாலும் மருந்தும் குழந்தைகட்கு ஊட்டுகின்றனர். வளையல், மோதிரம் ஆகியவை செய்யவும் சங்கு அறுக்கப்படுகிறது. இவ்வாறு சங்கு அறுத்துக் கீழக் கரையில் செய்யப்படும் வளையல்கள் வங்காளத்தில் விற்பனையாகின்றன. இராமேசுவரத்தில் ஜனவரி முதல் மார்ச்சுவரை சங்கு எடுக்கிறார்கள். நல்ல சாதி (சங்கிலும் சாதி இருக் கிறது!) சங்குகள் கிடைக்கின்றன். மண்டபம் காம்பிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள தென்வெடலையில் ஆகஸ்டுமுதல் டிசம்பர்வரையும் பெரிய பட்டினத்திலும் கீழக்கரையிலும் செப்டம்பர் முதல் ஜனவரி வரையும் சங்கு எடுக்கிறார்கள்.