உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அமாவாசை, முழுநிலா நாட்களில் தீவுகளுக்குச் செல்லும் வலையர் சமூகத்துப் பெண்கள் தண்ணீர் வடியும்போது சங்கு எடுக்கின் றனர். வலம்புரிச் சங்கு தேவிபட்டினம், திருப்பாலக்குடி, மோரியனை, கரங்காடு ஆகிய ஊர்களின் எதிரிலுள்ள கடல்களில் வலம்புரிச்சங்கு கிடைக்கிறது. . சங்கு வகைகள் பல. அவற்றுள் சிறந்தது வலம்புரிச் சங்கு. இது, கடவுளர்க்கு நீராட்டப்பயன்படும். வலம்புரிச்சங்கு கிடைத்தால் சைவர்கள் அதனைத்தங்கப் பூண்போட்டுப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வர். மதுரை, இராமேசுவரம், திருச்செந்தூர்க் கோவில்களில் வ்வகையாக வலம்புரிச் சங்குகளைப் பேணி வைத்திருக் கின்றனர். விழாநாட்களில் 108 வலம்புரிச் சங்ககுளைக் கொண்டு அபிடேகம் செய்வர். தஞ்சைமாவட்டம் திருக்கடையூரில் கார்த்திகைச் சோமவாரங்களில் 1008 சங்குகளில், உள்ளுறையும் தெய் வத்திற்குத் திருமுழுக்குச் செய்கின்றனர். வலம்புரிச்சங்கை போற்றுவர். வைணவர்களும் பெரிதும் வலம்புரிச் சங்கு இலக்குமியின் இயல்புடையது. அது இருக்கும் வீடு, செல்வப் பெருக்கோடு விளங்கும் என்பது அனு அனுபவம். அதன் விலை ஓராயிரம் ரூபாய்க்கு மேற்பட்டது. வலம்புரிச் சங்கை 'லெட்சுமி விக்கிரகத்தின் கால் ஓரத்தில் அடுக்கி வைக்கும் மரபு வங்காளத்தில் உண்டு. இசை ஒலி எழுப்பி, பேசுவதுபோலக் கேட்கும் தன்மையது வலம்புரிச்சங்கு. வலம்புரிச் . சங்கை