உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 எடுக்கும் மீனவர்க்கு அதன் மதிப்பில் ஒரு பங்கைக் கொடுப்பது வழக்கம். கீழக்கரை, சங்குத்தொழிலுக்கு ஒரு பெரிய சந்தையாக உள்ளது. இவ்வூர்ச் செல் வர்கள் இல்லங்களில் வலம்புரிச் சங்குகளைக் காட்சிப் பொருளாகவும், விற்பனைப் பொருளாகவும் காணலாம். காடுகள் இந்த மாவட்டத்தில் 500 சதுர கி மீ. பரப்புக்குக் காடுகள் உள்ளன. இது மாவட்டத்தின் அளவில் 10-க்கு நான்கு பங்கு. 100-க்கு 30 பங்கு காடுகள் உள்ள மாவட் டங்களில்தான் பொருளாதார வளர்ச்சியும் மழையும் இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் F இம்மாவட்டத்துக் காடுகளில் வட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளே வருவாய் தரும் காடுகள். இவற்றின் பரப்பு 250 + கி.மி. இராமநாதபுர மாவட்டம் ஏற்பட்ட பிறகும், திருநெல்வேலி மாவட்டத்துக் காடுகள் நிர்வாக அலுவலரே இராமநாதபுரத்துக்கும் பொறுப்பாக இருந் தார். 'மலபார்' மாவட்டம் பிரிந்து காடுகளைப்பேண வேண்டியநிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டபின் 1957-இவ் இராமநாதபுர மாவட்டத்திற்கெனத் தனியே காட் டிலாகா அலுவலர் ஓருவர் நியமிக்கப்பெற்றார். மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் மரங்கள் 70 அடி (21 மீட்டர்) உயரம்வரை வளர்கின்றன. தேக்கும் தோதகத்தியும் உள்ளன. அங்கே கிடைக்கும் தேக்கு மலையாளத்துத் தேக்கைப் போன்று உயர்ந்தது அன்று: எனினும் இது சிறு வீடுகள் கட்டவும் வண்டிச் சக்கரம் செய்யவும் உதவுகிறது. சந்தனமரம் ஆண்டு தோறும் பத்து டன் கிடைக்கிறது; இது, வ.ஆ.மாவட்டத்துத்