உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 ஸ்ரீ இராமாநுஜர் வாழ்க்கையோடு ஒட்டிப் பெரும் புகழ் பெற்ற புனிதமான திவ்வியதேசம் திருக்கோட் டியூர். வைணவ தத்துவம் பயின்றவர்கள் அனைவர்க்கும் தெரிந்த ஊர். இத்தலத்தில் சேவிக்காதவர்கள் நாவாய்ப் பிறப்பார்கள் என்பது வைணவர் நம்பிக்கை. தாய்லந்து நாடுவரை பரவியுள்ள திருப்பாவை பாடிய ஆண்டாள் பெரியாழ்வாரின் தரித்துத் திருக்கோவில் கொண்டதுமாகிய தலம் இம் மாவட்டத்து ஸ்ரீவில்லிபுத்தூர். சமணம்: மகளாக அவ இம்மாவட்டத்தில் ஒரு காலத்தில் காலத்தில் சமண மதம் பரவியிருந்தது என்பது குன்றக்குடி அருகேயுள்ள சமணர் குகைகளாலும் தேவகோட்டை-வட்டாணம் சாலையிலுள்ள அநுமந்தக்குடி என்னும் ஊர்ச் சமணர் கோவிலாலும் தெரிகின்றது. இஸ்லாம் : கடலோரப் பகுதிகளில் இஸ்லாமிய சமயம் பரவி யுள்ளது. இராமேசுவரம் தீவில் பல மசூதிகள் உள்ளன; இராமநாதபுரம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, இளையான்குடி, கமுதி, மண்டபம், திருப்பாலைக்குடி, சுந்தரபாண்டியன் பட்டினம், நம்புதாழை, அபிராமம், கீழக்கரைப் பகுதியிலுள்ள பெருநாழி மணல்மேடு கொந்தக் கருணையப்பா தர்கா என்ற ஊர்களிலுள்ள மசூதிகள் குறிப்பிடத்தக்கன் குணங்குடி என்னும் ஊரினரான மஸ்தான் சாகிபு (1800-1847) குர்ஆன் வேதத்தை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் எளிய சொற்களும் ஆழ்ந்த பொருள்களும் உடையவை.