76 சீதக்காதி வள்ளல் 17-ஆம் நூற்றாண்டில் கீழக்கரை யில் பிறந்தார். நவரத்தின வாணிகத்தில் அளவிடற் கரிய செல்வம் ஈட்டி, மன்னர் போல வாழ்ந்தார். தாம் அணிந்திருந்த ஆபரணங்களை, இறந்த பிறகு புலவருக் குக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்ததால் 'செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி' என்று புகழ் பெற்றார். இந்துக்களின் கோவில் போல அமைந்த பள்ளி வாசல் ஒன்றை இவர் கீழக்கரையில் கட்டினார். அதனுள் இவர் சமாதி இருக்கிறது. இவ்விருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியச் சமூகத் தின் பெரியாராகவும் சமயத் தலைவராயும் பெரிதும் மதிக்கப்படுபவரும் மேதகு அல்லமா தைக்கா அஹமது அப்துல் காதர் வால்லியுல்லா அவர்கள் இம்மாவட்டத் தில் அவதரித்தவர்களே. இவர்களுடைய அருமையும் பெருமையும் ஆற்றலும் தெய்வீக சக்தியும் 1967-இல் வெளிவந்த இவர்களுடைய எண்பதாம் பிறந்தநாள் மலரிலிருந்து தெரியவரும். கிறித்தவம் கத்தோலிக்க சமயப் பெரியாராகிய அரிச் அருளா னந்தர் அழியாப் புகழ் பெற்றது இம்மாவட்டத்தில். இவர் டி-பிரிட்டோ என்ற பெயருடன் 1647இல் போர்ச் சுகல் நாட்டில் பிறந்தார். 1675-ஆம் ஆண்டளவில் சோழ நாட்டிலும் 1680 முதல் இடையிடையே மறவர் நாடாகிய இராமநாதபுரம் திருவாடனை முதலிய வட்டங்களிலும் கிறித்தவ வேதத்தைப் போதித்தார். திரளான மக்கள் கிறித்தவராயினர். இதைச் சேதுபதி விரும்பவில்லை. சேதுபதியின் அலுவலர்கள் அருளா னந்தரைக் கொடுமைப்படுத்தினர். கசையால் அடித் தனர். கல்லிலும் முள்ளிலும் உருட்டினர். உயிரோ .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/78
Appearance