77 தெரிந்துகொள்ள, டிருக்கிறாரா என்று தீ மூட்டி மாட்டை எழுப்புவதுபோல எழுப்பினர். 1693 பிப்ரவரி 4-ஆம் நாள் புதன்கிழமையன்று ஓரியூரில் அருளானந்தர் தலை வெட்டப்பெற்றது. இன்றும் அதன் நினைவாக ஒரு திருவிழா நடைபெறுகிறது. அருளானந்தர் நினைவாக அர்ச் ஆரோக்கிய மாதா கோவில்கட்ட முடிவாயிற்று. 1734-இல் சேதுபதி இசைவு ஆணையில் கையொப்பமிட்டார். சேதுபதியின் மைத் துனன் ஒருவன் கிறித்தவனாகி, தானே தன் தோளில் செங்கற்களைச் சுமந்து வந்து, கோவில் கட்ட உதவினான். அருளானந்தர் நினைவாக ஓரியூரில் அவர் தலை வெட்டப்பட்ட இடத்தில் இந்தக் கோவிலும் கொலை செய்யப்படுமுன் அவர் செபித்த இடத்தில் அர்ச் அருளானந்தர் போப்பாண்டவரால் சிற்றாலயமும், அவருக்கு அர்ச்சிஷ்யப்பட்டம் 1947-இல் வழங்கப்பெற்ற பிறகு அவர் பெயரால் ஒரு பேராலயமும் கட்டப்பெற் றிருக்கின்றன. ஆங்கில ஆட்சியின் பயனாகவும் கடலோர வணிகர் தொடர்பாலும் கிறித்தவ சமயம் இம்மாவட்டத்தில் ஓரளவு பரவியுள்ளது. இராமேசுவரம் தீவில் சில தேவாலயங்கள் உள்ளன. பிற வட்டங்களைவிட, இராம நாதபுரம் வட்டத்தில் கிறித்தவம் சிறப்பிடம் பெற்றிருக் கிறது. தேபிரித்தோ பெருமகனின் வாழ்க்கை நிகழ்ச்சி களால் திருவாடானை வட்டத்துச் சருகணியும் ஓரியூரும் கத்தோலிக்கருக்கு மிகப் புனிதமான தலங்களாகி விட்டன. இவை பற்றி, பிறிதோரிடத்தில் கூறுவோம். சுவிடிஷ் மிசன் ஏற்படுத்திய மருத்துவ மனையை யொட்டித் திருப்பத்தூரில் உண்டான தேவாலயம் இப் போது தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயமாக விளங்குகிறது,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/79
Appearance