78 இம்மாவட்டத்தில் கிறித்தவத்தை வளர்த்த பெரு மக்களுள் முக்கியமானவர் (தஞ்சை சரபோஜி மன்னரின் நண்பனான) ஸ்குவார்ட்ஸ் (1726-1798) பாதிரியார்.* கத்தோலிக்க 'விகார்' ஒருவர் சருகணியில் உள்ளார். கீழ்க்கண்ட ஊர்களில் கத்தோலிக்கர் தொகுப்பாக உள்ளனர். திருவாடானை வட்டத்தில் ஓரியூர், ஆனகடா வூரணி, புளியால், இருதயபுரம் (ராஜ சிங்க மங்கலம்), சருகணி, இராமநாதபுரம்வட்டம் இராமநாத புரம், புதுப்பட்டினம், தங்கச்சி மடம்.(திருப்பத்தூர் வட்டம் திருப்பத்தூர், கூத்தனூர், காரைக்குடி, சிவ கங்கை வட்டம் மைக்கேல்புரம் (வேம்புத்தூர்),சூசையப் பர் பட்டினம் (காளையார் கோவில்), இடைக்காட்டூர், சவேரியர் பட்டினம் (மானாமதுரை) பரமக்குடி வட்டம் சாலைக்கிராமம், சூரணம், சுத்து மூன்றடைப்பு, இவ்வூர் களிலெல்லாம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளன. ஓரியூரிலும் புளியாலிலும் சருகணியிலும் உள்ள தேவா லயங்கள் மிகப் புகழ் பெற்றவை. குறிப்பிடத்தக்க பிற கத்தோலிக்க ஆலயங்கள் செஞ்சை, Church of Child Jesus, காரைக்குடி R. C. church. இடைக்காட்டூர் St. James church, எம்.சவேரி யார் பட்டினம் Church of our lady of Assumption, புளியால் Church of our lady of Lourdes, ராஜகம்பீரம் Holy Rosary Church. தென்னிந்தியத் திருச்சபையைச் சேர்ந்த கோவில் கள் நெடுங்காலமாக ஸ்ரீவில்லிபுத்தூரிலும் இராமநாத புரம் வட்டத்தின் பல பகுதிகளிலும் திருப்பத்தூரிலும் இயங்கி வருகின்றன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/80
Appearance