81 வரத்தில் பல்வேறு மடங்கள் சமய நிறுவனங்கள் ஆகிய வற்றின் கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன. காஞ்சி காமகோடிபீடம் சங்கராச்சாரிய சுவாமிகள் பட்டத்தில் 19-ஆம் நூ. இறுதியில் 65-வது பீடத்தை அலங்கரித்த பெரியவர்கள் இளையற்றக்குடியில் பரி பூரணம் ஆனார்கள். சமயப் பெருமக்கள் திருவாசகம் அருளிய மணிவாசகர் இம்மாவட்டத்து எல்லையில் (வைகை பின் எதிர்க் கரையிலுள்ள) கிருவாத வூரில் பிறந்து, இம்மாவட்டத்து எல்லையில் (தஞ்சை மாவட்டத்திலுள்ள) திருப்பெருத் துறைக் கோவிலை அடைந்த புகழுடையார். அவர் இம்மாவட்டத்தின் வழியே பல முறை நடந்து சென்றதும், உத்தரகோச மங்கையைப் பாடியதும் இம்மாவட்டத்தின் சிறப்புக்கள்* நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் தோன்றிய தலம் இம்மாவட்டத்தில் உள்ளது. வேதாந்தத்துக்கும் சித்தாந்தத்துக்கும் சமரசச் சுடராக விளங்கிய தாயுமானவர் (1705-1742) இராமநாத புரத்தில் தங்கிச் சீடர்களுக்கு அறவுரை வழங்கியும் மெளன நிட்டைகூடி அரிய பாடல்களைப் பாடியும இங்கு கோயில் சிவபதவி அடைந்தார். இந்நாளில் அவரது காட்சி தருகிறது. ஆண்டாள் அவதரித்த பதி, ஸ்ரீவில்லிபுத்தூர். பல ஸ்ரீ வைஷ்ணவ சமயாச்சாரியாராகிய இராமானு நுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் சமயக் கல்வி கற்க 11 ஆம் நூற்றாண்டில், முறை திருக்கோட்டியூர்க்கு வந்திருந்தார் என்பது இம்மாவட்டத்திற்குப் பெருமை தருகிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/83
Appearance