82 இனி, இவ்விருபதாம் நூற்றாண்டிற்கு வருவோம். பாம்பன் சுவாமிகள் செய்த அருட்செயல்கள் என்றும் நினைவு கூரத்தக்கவை. மேனாட்டாரும் புகழும் வண்ணம் இந்து சமயப் பெருமையை உணர்த்தியவர்கள் விவே கானந்தரும் (1862-1901)ரமணமஹரிஷியும் (1871-1950). சிக்காகோவில் நடை பெற்ற உலகர் சமயப் பாராளுமன்றத்தில் தம்புகழை நிலை நிறுத்தினார் விவேகானந்தர். அவரை அம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்தவர் இராமநாதபுரம் சேதுபதி ஆவார். செல்லு மாறு யோசனை சொல்லியவரும் அமெரிக்காவுக்கு போய் வருவதற்குரிய செலவை ஏற்றவரும் அவ்வரசரே. அமெரிக்காவில் வாகை சூடி பிறகு இந்திய மண்ணில் அவர் முதலில் காலெடுத்து வைத்தது இந்த இராம நாதபுர மாவட்டத்தில் தான். 1897 இல் பாம்பனில் கடற்கரையில் படகிலிருந்து இயங்கியதும் அவருக்குக் கொடுக்கப் பெற்ற வரவேற்பில் அவரை ஓர் அழகிய வண்டியில் வைத்து, குதிரைகளுக்குப் பதிலாகச் சேதுப யும் மற்றவர்களும் அவ்வண்டியை இழுத்தனர். அவ் வரவேற்புக்கு நன்றி கூறி, விவேகானந்தர் ஆற்றிய உரை (From Colombo to Almora என்ற நூலில்) அச்சிடப் பெற்றிருக்கிறது. . இராமநாதபுரத்தில் விவேகானந்தரை வரவேற்ற காட்சியும் ஊர்வலச் சிறப்பும், வாண வேடிக்கையோடு மரியாதைக் குண்டுகள் பொழிய ஏற்பாடு செய்திருந் ததும் குறிபிடத்தக்கவை. இராமநாதபுரத்தில் விவேகானந்தர் தங்கிய சங்கர விலாசம் என்னும் அரச மாளிகையில் விவேகானந்தர் மண்டபம் உள்ளது. திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்துப் பிற நாட்டாரையும் நமது பண்பாட்டிலும் சமய தத்துவக்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/84
Appearance