88 அதற்காகவே பொது இடங்களில் மந்தை அல்லது கூடம் அல்லது சவுக்கம் அல்லது அம்பலக்கல் என்ற டங்களில் இருந்து நீதி வழங்கினர் இவர்களது சமூகத் தினரும் இவர்களைச் சார்ந்துள்ள பிற சமூகக் குடிமக் களும் இவர்களது கட்டுப்பாட்டிற்கு உடன்பட்டு நடப்பர். ஒவ்வொரு சிற்றூருக்கும் ஒரு அம்பல காரரும், பல சிற்றூர்கள் அடங்கிய ஒவ்வொரு நாட்டிற்கு சில அம்பல காரர்களும் சிறப்புப் பெற்று நிற்பதோடு, தேர்தல் காலங்களில் பெருஞ் செல்வாக்குடன் திகழ்கின்றனர். கள்ளா; கள்ளர் தங்களைப் பல்லவர்களின் வழித் தோன்றங் கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலப் பகுதியில் கள்ளர்கள் ஏராள மாக இருக்கினறனர். கொள்ளை, கொலை வழக்குகளில் ஈடுபட்டதாக இவர்களைப் பற்றி சில வழக்குகள் நடை பெற்றன.கள்ளர்களைத் திருத்துவதற்காக அரசாங்கத் தார் பெரும் பணம் செலவிட்டு இருக்கிறார்கள். கள்ளர் களுக்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காகவும் குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபடாமல் இருப்பதற் காகவும் அரசாங்கத்தார் ஆவன செய்கின்றார்கள். அவர்களுடைய நலத்தைப் பேண, பல பொது நிதிகள் வைக்கப் பெற்றிருக்கின்றன. வேளாண்மையில் ஈடுபடும் கள்ளர்களுக்கு அரசாங்கத்தார் உதவிகளைச் செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டக் கள்ளர்களைப் போல பாண்டி நாட்டுக் கள்ளர்களும் உழவுத் தொழிலில் சிறக்க வேண்டும் என்பது அரசாங்கத்தாரின் விருப்ப மாகும். பாண்டி நாட்டுக் கள்ளர் சைவ சமயிகளாக இருந்த போதிலும் வைணவக் கடவுளாகிய அழகரைத் தான் அவர்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/90
Appearance