89 புதுக்கோட்டைத் தொண்டைமான்கள் இவ்வினத் தவரே. கள்ளர் சரித்திரம் என்றும் நூலை, பேராசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ளார். கள் தல் - பறித்தல்; கள்ளன் பறிப்பவன். கள்ள அறை - இரகசிய கள்ளன் - பிறர் அறை. எனவே, அறியா வகையில் அவரைப் பற்றிய உண்மைகளை அறிந்து அரசாங்கத்திற்குத் தெரிவிப்பவன் (C. I. D) ஒற்றன் எனக் கொள்ளலாம். தமிழரசரிடம் இருந்த ஒற்றர்" என்ற அரசாங்க அலுவலரே கள்ளர் ஆயினர். ஒற்றர் கூட்டம் தொன்று தொட்டு அரசர்க்குத் தேவைப் பட்ட ஓர் இனமாகும். கள்ளர் மரபினர் அஞ்சா நெஞ்சினராயும் வீரராயும் இன்றும் உள்ளனர். இவர் களின் முன்னோரும் வீரத்தில் சிறந்து விளங்கினர். அகம்படியர்: தொண்டு செய்தாற் கடவுளின் கோவிலுள் போலவே அரசர் கோவிலுள் (அரண்மனையுள்) தொண்டு சேர நாட்டில் செய்தவர் அகம்படியர் எனப்பட்டனர். திருமணத்தின் போது நம்பூதிரி மணமகன், பெண் வீட்டுக்குச் செல்லுகையில், வேல், வாள் முதலிய போர்க் கருவிகளைத் தாங்கிய நாயர்கள் அவனுக்கு முன்பு ஊர் வலமாகச் செல்வர். அவர்கள் அவனுடைய அகம்படியர் (மெய் காவலர்) எனப்படுகின்றனர். எனவே மன்னனின் மெய் காவலரும் அகம்படியர் என்பது அறியப் பெறும். பண்டைக் காலத்தில் இம்மூவினத்தவரும் அரசனுக் கும் அரசாங்கத்துக்கும் உயிர் போன்ற தொண்டரா யிருந்தனர். இவர்களுக்குச் சேர்வைகாரர் என்ற பெயர் வழங்கி வருகிறது. இவர்களுள் சிறப்புப் பெற்றவர். சிவகங்கைப் பகுதியில் மிகுதி. -6
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/91
Appearance