பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


160 பரமக்குடியில் அரிஜன தலைவர் ஒருவர் படுகொலை (1957) இளையாத்தாங்குடியில் காஞ்சி காமகோடி பீடாதி பதியின் ஆதரவில் புராதன கலைகள் பற்றிய ஒரு மாநாடு. தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் (1962) இராமேஸ்வரம் தீவும் தனுஷ்கோடியும் புயலின இலும், கடல் கொந்தளிப்பினாலும் பாதிக்கப்பட்டன தனுஷ்கோடி முழுமையாக அழிந்துபோயிற்று

  • (1964) இலங்கைஅரசின் சொத்தாக இருந்துவந்தமண்டபம் முகாம் முழுமையும் தமிழக அரசு 25 லட்சம் ரூபாய்க்கு கிரயம் பெற்றது (1965).

இலங்கை தலைமன்னரிலிருந்து இந்தியக் கரையான தனுஷ்கோடிக்கு நீந்திவந்து நீச்சல் வீரர் மிகிர்சென் சாதனை ஏற்படுத்தினர் (1965) இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கச்சத் தீவை நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை அரசுக்கு இந்திய அரசு தானம் கொடுத்தது (1965) தனுஷ்கோடி புயலினல் அழிவுபட்டதால் இலங் கைக்கான கப்பல் போக்குவரத்து ராமேஸ்வரத்தி லிருந்து துவக்கம் "h. (1966) இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் தலைநகரை அமைக்க வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி யினால் ஒரு வாரகால இயக்கம் (1969). இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இராமேஸ்வரம்