பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வாழ்த்துரை வரலாறு, வாழ்க்கையின் உண்மைகளை விளக்குவது. கருத்துக்களை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் மேலும் மேலும் வரலாற்றை உந்திச் செலுத்துவதிலும் வரலாறு சிறந்த பணியைச் செய்கிறது.

'இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக் குறிப்புக்கள்' ஒரு சிறந்த நூல். இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுப் புகழுடையதே. ஆனால் வரலாற்றுப் போக்கில் தன்னை இணைத்துக் கொள்ளாததால், மனிதகுல உணர்வு செழித்து. வளராததால் பின்தங்கிய' என்ற பெயரைப் பெற்று. விளங்கும் மாவட்டம். ஆனால் இயற்கையமைப்பாலும், சூழ்நிலைகளாலும் மாவட்டம் பின்தங்கியதன்று. சோழர் காலத்திலிருந்து இன்று வரை ராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாறு அரிய குறிப்புகளுடன் எழுதப்பெற்றுள்ளது. இன்று இராமநாதபுரம் மாவட்டம் பாண்டிய மண்டலம் என்றே கூறப்பெறுகிறது. ஆனால் சோழர்கள் இந்த மாவட்டத்தில் ஆட்சிசெலுத்திய வரலாறு சிறப்பாக எடுத்துக் கூறப் பெற்றுள்ளது. தேவிபட்டணம் பெயர் அமைந்த வரலாறு புதிய செய்தி. இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் சமயப்பற்று, நீதி சார்ந்த ஆட்சிக்குச் சான்றாகத் தண்டத்தேவர் தண்டிக்கப் பெற்ற வரலாற்றுக் குறிப்பு மனுநீதிச்