தாயரும் இராமனும் ே 101 தாயுள்ளம் அதைத் தாங்க முடியாது என்பதை அறிந்ததால்தான், இராகவன் இரண்டாவது ஆணையை இப்பொழுது மெல்லச் சொல்லத் தொடங்குகிறான். "தாயே! அரசர் இரண்டாவது கட்டளையும் பிறப்பித்துள்ளார். அக்கட்டளை என்னை நன்னெறிப்படுத்துவதற்கு ஏற்றதாகும் என்ற முறையில்தான் அவர் அதனைப் பிறப்பித்தார்." இவ்வாறு இராமன் கூறியவுடன் ஒரு சிறிதும் மனக்கலக்கம் இல்லாமல் "தந்தை சொன்ன அப்பணி யாது” என்று கேட்கிறாள். அத்தாய். ஒரு சிறிதும் பதட்டப்படாமல், சண்டு உரைத்த பணி என்னை?, என்று அவள் கேட்டதன் தத்துவம் யாது? அதிர்ச்சி தரும் செய்தி முன்னரே சொல்லப் பட்டு விட்டதால், அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி வேறு இருக்க முடியாது என்பதால்தான் ஈண்டு உரைத்த பணி என்னை என்று கேட்கிறாள். அவளுடைய பதட்டமின்மையை இயல்பாகவே பெற்றிருந்த இராகவன், ஏதோ ஒரு சாதாரணச் செய்தியை கூறுபவன் போல பதிலிறுப்பது இராகவனை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. "ஈண்டு உரைத்தபணி என்னை? என்றவட்கு ஆண்டு ஒர் ஏழினொடு ஏழ் அகன் கானிடை மாண்டமா தவத்தோருடன் வைகி, பின் மீண்டு நீ வரல்வேண்டும்" என்றான். என்றான். - கம்ப. 1612. பேரதிர்ச்சி அடைந்த அத் தாய், தசரதன் இராகவனை அழைத்து, 'நீ முடிசூடிக்கொள்' என்று கூறியது உண்மையாகவே சொல்லப்பட்டதா ? அப்படிச் சொல்லியிருந்தால் சில நாழிகைப் பொழுதில் இப்படி ஒரு மாற்றம் வரமுடியுமா என்று நினைத்தவுடன், இராகவனை ஏமாற்ற வேண்டும் என்று வஞ்சகமான எண்ணத்தை மனத்தில் வைத்துக்கொண்டு மன்னன் இவ்வாறு முதலில் கூறினானோ? இந்த அதிர்ச்சியைத் தாங்காமல் என் உயிர் போய்விடுமோ என்று அழத்துவங்கினாள் கோசல நாட்டு உரிமை பெற்றவளாகிய கெளசல்யை.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/119
Appearance