பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 38 இராமன் - பன்முக நோக்கில் மகன் சமாளித்த சதுரப்பாடு மயங்கி விழப்போன கோசலையைத் தாங்கிப் பிடித்து இராகவன் பேசுவது அவளைத் தேற்றுவதற்கு மட்டுமல்லாமல் அவன் உறுதியை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது: "சிறந்த தம்பி திருஉற, எந்தையை மறந்தும் பொய் இலன் ஆக்கி, வனத்திடை உறைந்து தீரும் உறுதி பெற்றேன், இதின், பிறந்தது யான்பெறும் பேறுஎன்பது யாவதோ?” - கம்ப. 1621. தான் காடு செல்ல வேண்டியிருப்பதை முதலில் சொல்லாமல், இரண்டாம் முறையாகச் சொல்லியவன், அப்படிச் சொல்லியபின் தன் தாய், அதைத் தடுக்கக் கூடாது என்பதைக் குறிப்பாகச் சொல்லுகிறான். 'எந்தையை மறந்தும் பொய் இலன் ஆக்கி என்றதால், இப்பொழுது தான் காட்டிற்குச் செல்லவில்லை என்றால் அவள் கணவன் பொய்சொன்னவ னாகிவிடுவான். எந்தவொரு மனைவியும், கணவனுக்கு அவப்பேர் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பாள் அல்லவா? எனவே, தந்தையைப் பொய் சொல்லாதவனாக ஆக்குவேன் என்றான். அப்படிக் கூறியவன் அடுத்தபடியாகக் காடுசெல்லும் உறுதியுடன் இருக்கிறேன்' என்று மறுபடியும் சொல்வது, தாய் தன்னைத் தடுக்க வேண்டாம் என்பதைக் குறிப்பாகக் கூறுவதற்கேயாம். அவனின் உறுதிப்பாட்டைக் கண்ட தாய் அடக்க முடியாத் துயரத்தை அடைந்திருக்க வேண்டும். அவளை அமைதிப்படுத்தும் வகையில் வேறொன்றையும் சொல்கிறான். தன் உறுதிப்பாடு என்று சொல்லியவுடன் அவள் தாயன்பைப் பயன்படுத்தி அவன் உறுதியைக் குலைக்க முயலலாம் அல்லவா? துயரக் கடலில் மூழ்கிய அவள், "மகனே! என்மீது ஆணை. நீ போகக் கூடாது" என்று வாய்தவறிக் கூறிவிட்டால் இராமன் கதி என்னவாகும் அப்படி ஒரு சூழ்நிலை