பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邯06 38 இராமன் - பன்முக நோக்கில் மனித நிலையில் நினைக்கிறான். இந்தச் சிற்றன்னையின் அதிகாரம் பரதன் ஆட்சிக்கு வந்த பின்னும் தொடரத்தானே செய்யும்? அப்பொழுது தசரதன் நிலை எப்படி இருக்கக் கூடும் என்பதை நினைப்பூட்டுவான்போல இராகவன் தாயிடம் நேரிடையாகச் சொல்லாமல் மறைமுகமாகவும் குறிப்பாகவும் பேசுகிறான். அதுவே இரண்டாம் பாடலின் உட்கிடக்கை ஆகும். பரதன் எத்துணைச் சிறந்தவன் ஆயினும், அப்பொழுது ராஜமாதாவாக பொறுப்பு ஏற்கப் போகின்றவள் கைகேயி அல்லவா? அப்பொழுது தசரதன் நிலை பரிதாபமாகிவிடும் என்பதைச் சுட்டு வான் போலப் பேசுகிறான். என்றாலும், அதைத் தன் தாயிடம் நேரே சொல்ல விரும்பவில்லை. அப்படிச் சொன்னால் சககிழத்தியின்மீது கோசலையின் சினம் அதிகரிக்கும். தான் காடு போய் விட்ட பின்னர்த் தன் தந்தையின் நிலையைப் போலவே தன் தாயின் நிலையும் இரக்கத்திற்குரியதாகிவிடும். என்றாலும், இவர்கள் இருவருமே பரதன் ஆட்சியில் அரண்மனையில் தங்க வேண்டியவர்கள். ஆதலால் கைகேயியின் மேல் கோசலைக்குச் சினம் உண்டாகாதவாறு அற்புதமாகப் பேசுகிறான் இராகவன். “தாயே! அருமைத் தம்பி பரதன் பட்டம் ஏற்ற பிறகு தந்தை வானப்பிரஸ்தம் செல்வார். அப்பொழுது நீங்கள் அவருக்குத் துணையாக இருக்க வேண்டாமா?" என்ற பொருளில் அவன் பேசினான் என்பதை இரண்டாவது பாடல் அறிவிக்கின்றது. இங்கு நாம் கூறிய கருத்துகள் வான்மீகி அடியொற்றிப் பேசப்பட்டவை ஆகும். இதனை விரிவாகக் கூறினால், தான் படைத்த இராமனுக்கு இழுக்கு நேர்ந்துவிடும் என்று கருதிய கம்பநாடன் மிக அற்புதமாக இராமன் கூற்றாக மேலே காட்டியுள்ள இரண்டு பாடல்களைப் பாடி வைத்துள்ளான். மேலாகப் பார்ப்பதற்கு மிகச் சாதாரண முறையில் பொருள் கொள்ளும்படி பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சொல்லையும் தனியே எடுத்து ஆய்ந்தால், மேலே கூறிய வாதங்களுக்கு அச்சொற்கள் இடம் கொடுப்பதைக் 35fr6ðŪT GUITA D.