பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 36 இராமன் - பன்முக நோக்கில் முரண்பாடுகள் இல்லாமையை அறியலாம். "நாயகன் உரையான் வாயான்". எனவே, அவன் திருவாய்க் கேள்வியாக இருக்கும் நான் அவனுடைய ஆணையை அப்படியே கூறுகிறேன்” என்று தொடங்கி அந்த ஆணையை வெளியிடுகின்றாள். இந்த இயம்பினன் அரசன் என்ற சொற்களும் இவள் தந்த விளக்கமாகும். இயம்பினன்' என்று சொல்லியிருந்தாலே போதும். நாயகன்' என்றும், உந்தை' என்றும் கூறியவள், 'இயம்பினன்' என்று கூறி நிறுத்தியிருந்தாலே, போதுமானதாகும். அப்படி இருக்க, 'அரசன் என்ற சொல்லைத் தேவை இல்லாது கூறினாளோ எனின், அன்று. ஒரு மனைவி தன் கணவனை நாயகன் என்று கூறுவது மரபு. தலைவன் என்று பொருள்படும் அச் சொல்லுக்கு, அதுவும் மனைவி கூற்றாக வரும் அச் சொல்லுக்குத் தலைவன் என்று பொருள் கொள்ள வேண்டும் தவிர, அரசன் என்று பொருள் கொள்ள வேண்டிய தேவையில்லை. “உந்தை உனக்கு உரைப்பது ஒர் உரை உண்டு. அதை நான் சொல்கிறேன்" என்று கூறிவிட்டால், அதை ஏற்று நடக்க வேண்டிய கடப்பாடு இராமனிடம் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். தந்தை தவறிழைத்தான்' என்று கூறி மகன் அதை மறுக்கலாம் அல்லவா? எனவே, நாயகன், உந்தை என்ற இரண்டு சொற்களும் எதிர்ப்பி பிற்கு இடந்த ருவன வாதலின் நுண்ணறிவுடைய கைகேயி எதிப்ர்பே இல்லாமல் செய்ய ஒரு வழியைக் காண்கிறாள். இராமனை முன்னிலைப்படுத்தி 'ஏழிரண்டாண்டில் வா என்ற கட்டளையை நேரே இராமனுக்குத் தயரதன் இடுவதுபோல் அமைத்துப் பேசுகிறாள். கட்டளை இட்டவனை என்னுடைய நாயகன் என்றோ, உன்னுடைய தந்தை என்றோ எண்ணிவிடாதே. இவ்வாறு கட்டளை இட்டவன் இந்நாட்டு மன்னன் என்று அறிவுறுத்துமுகமாக, 'இயம்பினன் அரசன் என்று கைகேயி கூறும்பொழுது முதலில் குழம்பி, பிறகு மனம் தெளிந்த நிலையில் அவள் பேசுவதை அறிய முடிகிறது. இராமன்