பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயரும் இராமனும் ே 怡 அவள் சொல்லவந்தவற்றில் முரண்பாடுகள் பொதிந்து கிடப்பதைக் காணலாம். "நாயகன் உரையான் வாயால்" என்று தொடங்கியவள், 'இயம்பினன் அரசன் என்று முடிக்கின்றாள். வாயால் உரையாமல் இருக்கும்பொழுது, 'இயம்பினன் அரசன் என்பது எவ்வளவு பொருத்தமற்றது! இந்த இரண்டு கூற்றுகளிலும் உள்ள முரண்பாடு எளிதில் விளங்கும். இயம்பினன் அரசன்' என்பதற்கு, உன்னிடம் சொல்ல முடியாமல் என்னிடம் இயம்பினன் என்று பொருள் கண்டால், இந்த முரண்பாட்டைத் தவிர்க்கலாமே என்று சிலர் கருதலாம். அவர்கள் வாதம் ஒத்துவராது என்பதற்குப் பாடலின் நான்காவது அடி குறுக்கே நிற்கிறது. ஆழிசூழ் உலகம் எல்லாம் என்று தொடங்கி, வா என்பது முடிய ஆனை நேரிடையாகத் தசரதன் கூற்றாக அமைந்துள்ளதைக் காணவேண்டும். வா என்ற முன்னிலை ஏவல் ஒருமை 'இராமா நீ என்ற தோற்றா எழுவாய் கொண்டு முடிவதைக் காணலாம். அதாவது, இராமா நீ தாழ் இருஞ்சடைகள் தாங்கி, ஏழிரண்டாண்டில் வா’ என்று முடியும் தொடர்ப்பொருள் இராமனை முன்னிலைப்படுத்தி அரசன் ஏவிய ஆணையாகக் கொள்வதுதான் இப்பாடலின் பொருளாகும். என்று, இயம்பினன் அரசன்' என்ற கைகேயியின் கூற்று, அரசன் வாயினால் இட்ட ஆணையை அப்படியே எடுத்துக்கூறி, என்ற ஆணையை வாய்மொழியாக இயம்பினான் அரசன் என்று அவள் கூறுவதாக முடிகின்றது. தமிழ்நாட்டில் அரசர்கள் வாய்மொழி ஆணையை அறிவிப்பவர்கள் திருவாய்க்கேள்வி' என்று அழைக்கப் பட்டனர். கல்வெட்டில் வரும் இப்பெயர் அரசன் வாயினால் சொல்லுகின்ற ஆணையைக் காதால் கேட்டு அதனை வெளியிடுகின்றவர்கள் பதவிக்குத் திருவாய்க் கேள்வி என்ற பெயர் உண்டு. கைகேயி, தன்னைத் தானே அரசன் திருவாய்க் கேள்வியாக நினைத்துக்கொண்டு பேசுவதாக வைத்துக் கொண்டால், இப்பொழுது அவள் கூற்றுகளில்