பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுக்கு வந்தால் எல்லையற்ற இடர் தருவாய்' என்கிறான். 'காட்டில் உள்ள முனி புங்கவரின் மனைவிமார்கள் அவர்களுக்கு இடரையா தருகின்றனர்?" என்று வினவி இதனைத் தசரதராமன் கூற்றாகக் கொள்வதைக் காட்டிலும் மூல இராமன் நினைப்பாகக் கொள்வதே பொருந்தும் என்று கருத்துரை வழங்கப்படுகிறது. சீதை இலக்குவன் கூறிய தெளிவுரையைச் செவிமடுக்காமல் அவனை மானின்பின் சென்ற இராமன்பால் செல்ல வற்புறுத்தியது கைகேயி இராமனைக் காட்டுக்கு அனுப்பிய செயலை ஒப்பது. இதற்கும் காரணம் அரக்கர். பாவமும் அல்லவர் இயற்றிய அறமுமே என்பது தெருட்டப்படுகிறது. கம்பநாடர் சீதை இலக்குவன் உரையாடலாக வான்மீகத்தில் வரும் செய்திகள் சில அவர்கள் பெருமையைக் குறைப்பதாக அமைந்திருத்தலால் அவற்றை மாற்றியமைக்கிறான் என்று காப்பிய ஆசிரியரின் திறம் உணர்த்தப்படுகிறது. சீதையின் தீக்குளிப்பு அவள் குற்ற வுணர்ச்சியைத் துடைக்க இராமன் நிகழ்த்திய அற்புத நாடகம் என்று காட்டப்படுகிறது. இவையனைத்தும் பேராசிரியரின் புதிய பார்வைகள்; இனிய விளக்கங்கள். இராம காதையின் சிறந்த பாத்திரங்களுள் ஒன்று அனுமன். அவன் அறிவும் உணர்வும் நிறைந்த இறைத் தொண்டன், அவனுக்கும் இராமனுக்கும் இருந்த தொடர்பை விளக்குவதே அனுமனும் இராமனும் என்னும் கட்டுரை. அனுமன் நடந்து வரும் இராம இலக்குவர்களின் தோற்றம் செயல்களைக் கொண்டே அவர்கள் சீதையை இழந்துவரும் வருத்த நிலையை அனுமானித்து விடுகிறான் என்பதும், இராமனும் அனுமனும் ஒருவரை ஒருவர் கண்களால் எடைபோட்டு அறிந்தனர் என்பதும் நன்கு விளக்கப் பட்டுள்ளன. அனுமன் செயல்கள், அவன் நெஞ்சுரம் முதலியவற்றை எடுத்துக்காட்டி அவனிடம் இராமன் கொண்டிருந்த ஈடுபாடு இறுதியில் குறிக்கப்படுகிறது. இராமன் அவனிடம் 'நீ என்னைப் புல்லுக என்கிறான். அதுவே இராமன் அவனுக்குத் தந்த பரிசு. இதனைப் "பக்தர்கள் இறைவனின் திருவடி நீழலில் சென்று தங்குவதற்குப் பதிலாக,