தம்பியரும் இராமனும் 38 185 "புண்சொற்கள் தந்த பகுவாய் அரக்கன் உரை பொய்எனாது, புலர்வாள் வன்சொற்கள் தந்து மடமங்கை ஏவ, நிலைதேர வந்த மருளோ? தன்சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு, தனியே என்சொல் கடந்து, மனமும் தளர்ந்த இளவீரன் வந்த இயல்பே." - கம்ப 3466 'அம்புப் பட்டதும் அந்தப் பொன்மான் தன் பழைய அரக்க வடிவைப் பெற்று இராமன் குரலில் ஒலமிட்டதைக் கேட்ட சீதை அழுது உடனே இராமனைத் தேடிச் செல்க' என்று கட்டளை இட்டாள்போலும்! அதனைத் தக்க காரணம் காட்டி இலக்குவன் மறுக்கவும், கடுஞ்சொல் பேசி இலக்குவனை இங்கே அனுப்பியிருக்கிறாள். எந்த இலக்குவனுடைய முன் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் மீறி வந்து பெரும் துன்பத்தில் அகப்பட்டு நொந்துள்ளேனோ, அதே இலக்குவன் இப்பொழுது என்னைக் காண வருகிறான். ‘அண்ணியைக் காவல் செய்வாயாக’ என்ற என்னுடைய கட்டளையை மீறும்படி சீதை ஏவியதால் மனம் தளர்ந்து இதோ வருகின்றான் - இது பாடலின் செய்தி. இதிலிருந்து இராம, இலக்குவர்கள் உரையாடலும் மாபெரும் கேடு ஒன்று தங்களைத் சூழ்ந்திருக்கிறது என்ற இராமனின் உள் உணர்வும் பல வகையாகத் தன் துயரத்தை வெளியிட்டு இராகவன் பேசுவதைக் கவிஞன் வருணிக்கின்றான். இனி, மூல இராமன் ஒடுக்கம் தொடக்கம் முதல் பல சந்தர்ப்பங்களில் இராமனையோ இராமன் பேசுவதையோ குறிக்கும் பொழுது தசரத ராமனையும் அவனுள் இருக்கும் மூல இராமனையும் நாம்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/203
Appearance