பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் .ே 205 "அத்தா! இது கேள்' என, ஆரியன் கூறுவான், இப் பித்து ஆயவிலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ? எத்தாயர் வயிற்றினும், பின் பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ?" - கம்ப. 3977 இப்பாடலில் இரண்டு கருத்துகளை இராகவன் கூறுகிறான். "என் அத்தனே, இலக்குவா! நான் சொல்லப் போவதைக் கவனமாக கேட்பாயாக. இவைகளோ விலங்குகள், ஆறறிவு படைத்த நம்முடைய ஒழுகலாறுகளை இவற்றிடம் எதிர் பார்ப்பது சரியன்று. (அவை மனம் போனபடி வாழும் இயல் புடையன.) அடுத்து, எல்லாத் தாய்மார்கள் வயிற்றிலும் இரண்டாவதாக மூன்றாவதாகப் பிறப்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அப்படி அனைவரும் ஒரேமாதிரி இருந்துவிட்டால் பின் பிறந்தவர் அனைவருள்ளும் பரதன் ஈடுஇணையற்ற உத்தமன் என்று சொல்லமுடியாமல் போய்விடும் அன்றோ? இந்த இரண்டு கருத்துகளையும் கூறிய முறையில் அண்ணனைக் கொல்லச் சதி செய்த சுக்கிரீவன் விலங்கு, ஆதலால் நம்முடைய அண்ணன் தம்பி உறவுமுறைகளைச் சுக்கிரீவனிடம் எதிர்பார்க்கக் கூடாது என்ற அளவில் சொல்லி யிருந்தால் இவை இலக்குவன் மனமாறுபாட்டிற்குக் கொடுத்த விடையாகும். அதற்கு மேல் ஒருபடி சென்று பின் பிற்தவர்கள் யாவரும் மனிதர்களாக இருப்பினும் அவருள் மாறுபாடு நிரம்ப உண்டு என்ற பொது நியதியைக் கூறிவிட்டு, அனைவரும் ஒத்திருந்தால் பரதனை மட்டும் பிரித்தெடுத்து உத்தமன் என்று எப்படிச் சொல்லமுடியும் எனவும் வினாவி யிருக்கிறான், இராமன். மூன்று, நான்காம் அடிகளில் இராமன் கூறிய இக் கருத்து தேவையில்லாத ஒன்று. என்றாலும் இதனைச் சொல்பவன் இராமன். பயனில்லாத ஒரு சொல்லைக்கூட இராகவன் பேசமாட்டான். அப்படியானால் இங்கே எதிரே