பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f0 ேே. இராமன் - பன்முக நோக்கில் சிறந்த பொன்னாபரணங்களை வாரி வாரி வழங்கினான். முன்னர்ப் பின்னர் ஆபரணங்களைப் பார்த்தறியாத அப் பாணரின் துணைவியரான விறலியர் எந்த அணிகளை எந்த உறுப்பில் எவ்வாறு அணியவேண்டும் என்பதை அறியாதவ ராகையினாலே விரல்களில் போடவேண்டிய மோதிரத்தைக் காதுகளிலும், காதிற் போடவேண்டியவற்றை விரல்களிலும், இடையில் கட்டவேண்டியவற்றை கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றை இடையிலும் அணிந்து கொண்டனராம். இச்செயல் எதுபோல உள்ளது என்று கூறவந்த கவிஞர், மிக்க ஆற்றலையுடைய இராமனுடன் வந்திருந்த சீதையை வன்மையுடைய அரக்கன் இராவணன்) கவர்ந்து சென்றபொழுது, சீதையிடத்திருந்து நிலத்தில் விழுந்த மதிப்புயர்ந்த ஆபரணங்களை (கிட்கிந்தையிலுள்ள) சிவந்த முகத்தையுடைய குரங்கின் கூட்டம் எடுத்து (எவ்வாறு அணிவது என்று தெரியாமல்) அணிந்துகொண்டு பெருநகைக்கு இடம் அளித்ததுபோல உளது என்ற பொருளில், எமக்கு எனவகுத்தன அல்ல மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே அதுகண்டு இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல் விரல்செறி மரபின செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின விரல் செறிக்குநரும் அரைக்கு.அமை மரபின மிடற்று யாக்குநரும் மிடற்று அமை மரபின அரைக்கு ஆக்குநரும் கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாங்கு அறாஅ வருநகை இனிது பெற்றிகுமே - புறம் - 378