பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 38 இராமன் - பன்முக நோக்கில் முனிவனாகிய வசிட்டன் நன்கு அறிந்திருந்தான். இவர்கள் இருவரும் இராமன் யார், எதற்கு வந்துள்ளான், அப்பணி நிறைவேற என்ன செய்ய வேண்டும் என்பவற்றை நன்கு அறிந்திருந்தனர். ஆனாலும் என்ன? 'கையில் ஊமன் கண்ணில் காத்த வெண்ணெய் உணங்கல் போல (குறுந்தொகை 58) இவ்விருவருமே தங்கள் மனத்தில் உள்ளதை வெளியிட முடியாத இக்கட்டான நிலையில் உள்ளனர். எது எப்படி இருந்தாலும், விசுவாமித்திரன் நினைத்து வந்த திட்டம் நிறைவேற வேண்டும் என்பதை அறிந்த குலகுரு, விசுவாமித்திரனைக் குறிப்பாகப் பார்த்து பொறுத்தி நீ எனக் கூறினான். அவ்வாறு சொல்லும்போதே, உன் திட்டத்தை நான் அறிவேன், அது நிறைவேற நான் உதவுகிறேன். இடையில் உள்ள தடைகளைப் பொறுத்தருள்க' என்ற கருத்தில் விசுவாமித்திரனை அமைதி பெறச் செய்து, தசரதனிடம் திரும்பினான் குலகுரு. “அரசே! உன் மகனுக்குக் கிடைத்தற்கரிய உறுதிப் பொருட்கள் வந்து சேர வேண்டிய காலம் இதுவாகும். அவை வரவேண்டாம் என்று மறுத்தியோ நீ என்று சொல்ல, வேறு வழியின்றித் தசரதன் திருவின் கேள்வனைக் கொணர்மின் (330) என்று கட்டளை இடுகிறான். திருவின் கேள்வன், கரிய செம்மல் - விளக்கம் இதில் வியப்பென்னவென்றால், இராமன் என்று குறிப்பிட்டு விசுவாமித்திரன் கேட்கவுமில்லை. நின் மகற்கு உறுதி எய்தும் நாள் என்று கூறிய வசிட்டனும் உன் மகனுக்கு என்று கூறினானே தவிர, எந்த மகனுக்கு என்று கூறவில்லை. அப்படியிருந்தும் தசரதன் தொடக்கத்திலிருந்தே இராமனையே நினைத்துக் கொண்டிருந்தான். ஆதலின், திருவின் கேள்வனைக் கொணர்மின் என்று ஆணை இட்டான். இங்குத் திருவின் கேள்வன்' என்று தசரதன் எந்த கருத்தில் பேசுகிறான் : இராமனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருவின் கேள்வன் என்றால், இலக்குமியின் தலைவனான திருமால்' என்ற பொருளும் அத்தொடருக்கு உண்டு. ஆனால், இராமன் திருமாலின்