பரம்பொருளும் இராமனும் ேே 413 தலைவன் ஆவான், அவனைச் சரணம் அடைவதே உயிர்களின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். (2) எந்தப் பரம்பொருள் மேலிருந்து கீழே இறங்கி, ஐம்பெரும் பூதங்களால் ஆகிய இப்பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவியும், வெளிப்பட்டும் தனித்தும் நிற்கின்றதோ அதே பரம்பொருள்தான் ஆட்சியைத் துறந்து, காடு, கடல் ஆகியவற்றைக் கடந்து இமையோர்களுடைய இடுக்கண்களைப் போக்கிய அயோத்தி மன்னனாக வந்தது. (3) தான் முழுமையாக இருந்து கொண்டு, முழுமையான பிரபஞ்சத்தைத் தன்னிலிருந்து உண்டாக்கி, தன் முழுமை குறையாமல் இருக்கும் ஆதிதேவன் எவனோ, அவனை அறிந்து கொள்ளும் ஆற்றல் நம் சிற்றறிவுக்கு இல்லை. (4) மூன்று என்று எண்ணிக்கையில் வரும் மும்மூர்த்திகள், முக்குணங்கள் ஆகிய அனைத்தின் வடிவங்களாக உள்ள அனைத்தும், அம்மூலப்பொருளே என்று சொல்லுதற்கும், இவ்வடிவங்கள் அனைத்திலும் தோய்ந்து நிற்கும் ஒருவன் அவனே என்றும், நல்உணர்வுடையோர் உணர்ந்து கொள்ளும்படி செய்கிறவனும் அவனே ஆவான். (5) கீழே கிடக்கும் மலர்மாலையைப் பாம்பு என்று நினைப்பவர்கள் பின்னர் அது பாம்பன்று மாலைதான் என்று அறிந்து கொள்ளுமாப்போலே இந்த ஐந்து பூதங்களும், மாறுபட்ட வெவ்வேறானவை என்று உணர்தல் வேண்டும். யாரைக் கண்டால் ஐம்பூதங்கள் வெவ்வேறானவை என்ற சந்தேகம் நீங்கி இவை அனைத்தும் ஒன்று என்று தெரிகிறார்களோ அந்த ஒருவனே வேதத்தின் முடிவாகவும் இருந்து கையில் வில்லேந்தி இலங்கையில் போர் புரிந்தான் என்று (ஞானிகள்) கூறுவர். - (6) ஒன்று - பல, உண்டு - இல்லை, அன்று - ஆம் என்ற இந்த இரட்டைகள் உண்மையில் ஒரே பொருளின் வெவ்வேறான பண்புகளாகும். இந்த மாறுபட்டவற்றல் குறிக்கப்படுபவன் நம் தலைவன் என்றால் நாம் அவனை அறிவது எவ்வாறு?
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/434
Appearance