பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 36 இராமன் - பன்முக நோக்கில் கிரகங்களின் உச்ச நீசங்கள் வடபிராந்தியத்தில் வழங்கும் வான்மீகியில் இல்லை. ஏறத்தாழ 6ஆம் நூற்றாண்டு முதலே ஞானசம்பந்தர் பாடலில் 27 நட்சத்திரங்களும், 9 கோள்களும் பேசப்படுகின்றன. 8ஆம் நூற்றாண்டில் சுந்தரர் "மகத்தில் புக்கதோர் சனி” என்று பாடுவதாலும், தென்னாட்டில் நாள், கோள் பற்றிய கருத்துகள் இருந்தன என்பது புலனாகும். இதற்கு முன்னரும் சிலப்பதிகாரத்தில் "ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று' (சிலம்பு - கட்டுரை 133, 134), (ஆடி மாதத்தில் தேய்பிறைப் பட்சத்தில் பரணி, கார்த்திகை சந்திப்பில் அட்டமி திதியில்) என்று வருதலால் 2ஆம் நூற்றாண்டிலும் நாள், கோள் பற்றிய நம்பிக்கை தமிழகத்தில் இருந்ததென்று அறிகிறோம். இனி, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முற்பட்டுத் தோன்றிய புறநானூறு 229ஆம் பாடலில் மிக விரிவாக நாள், கோள் நிலைமைபற்றிப் பேசி, அந்த நாளில் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்து விடுவான் என்று கூடலூர்க் கிழார் என்ற புலவர் பாடிய பாடல் இருப்பதால், சோதிட சாத்திரத்தில் தமிழர்கள் கி. மு. 2ஆம் நூற்றாண்டிலேயே எவ்வளவு முன்னேறியிருந்தனர் என்று அறிகிறோம். புறநானூற்றுப் பாடலுக்குச் சற்று முன்னோ பின்னோ தோன்றிய பட்டினப்பாலையில் மழைவளம் அற்று, பெரும் பஞ்சம் ஏற்படுவதற்குரிய காலநிலமையைக் கூற வந்த உருத்திரங்கண்ணனார் என்ற புலவர், வசை இல்புகழ், வயங்கு வெண்மீன் திசைதிரிந்து, தெற்கு ஏகினும் தற்பாடிய தளி உணவின் புள்தேம்பப் புயல்மாறி, வான் பொய்ப்பினும்,. - பட்டினப்பாலை 1 - 5 என்ற பகுதியில் வற்கடம் எனப்படும் பஞ்சம் தோன்றுவதற்குரிய கோள்களின் நிலையை விளக்கமாக எடுத்துக் கூறுகிறார். இந்த எடுத்துக்காட்டுகளை இங்கே கூறுவதன் நோக்கம் ஒன்றுண்டு. தமிழர்கள் சோதிடத் துறையில் இவ்வளவு