பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரிவானாக என்று என் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கையெழுத்துப் படியை நிதானமாகப் படித்து வேண்டும் திருத்தங்கள் செய்து உதவிய என் முதல் மாணவர் டாக்டர் ம.ரா.போ.குருசாமி அவர்கட்கும் என் நல்வாழ்த்து உரியதாகும். இந்த நூலுக்கு இளம் தலைமுறையினரில் தலையாய அறிஞரான டாக்டர் தெ. ஞானசுந்தரம் அவர்களை அணிந்துரைத் தருமாறு கேட்டுக் கொண்டேன். கையெழுத்துப் பிரதியையே படித்து, அணிந்துரை என்ற பெயரில் ஒரு திறனாய்வுக் கட்டுரையையே வழங்கியுள்ள அவருக்கு என் நன்றியும், நல்வாழ்த்துக்களும் உரியனவாகும். சபரி போன்ற சிறு பாத்திரங்கள் பற்றி எழுதாமைக்குக் காரணம், நூல் மேலும் விரிவடையும் என்பதாலேயேயாகும். தெய்வப் படங்களை வரைவதில் ஈடுஇணையற்று விளங்கும் ஒவியர் திரு.பத்மாவாசன் அவர்கள், மிகச் சிறந்த இரண்டு ஒவியங்களை அட்டைப் படத்திற்காக வரைந்துள்ளார்கள். இராமன்-பன்முக நோக்கில் என்ற பெயருக்கேற்ப அட்டையின் முகப்புப் படம் அமைந்துள்ளது அவர் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். மிக இளைஞராகிய அவருக்கு என் நல்வாழ்த்துக்கள் உரியன. இந்நூலுக்கு சொல்லடைவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலை நன்முறையில் அச்சிட்டு வழங்கிய கங்கை புத்தக நிலையத்தாருக்கு என் நல்வாழ்த்துக்கள் உரியதாகும். அ. ச. ஞானசம்பந்தன்