பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - VI 1. கல்லிலும் செம்பிலும் முந்தைய காலங்களில் திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் தமிழ்ச் சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் மக்களது தேவைகளை நிறைவு செய்யும் நிறுவனங்களாகவும் இருந்து வந்துள்ளன. குறிப்பாக ஊர் ச்சபை கூடுமிடமாக தமிழ்மொழி பயிற்றுவிக்கும் பள்ளியாக, சிற்பம். ஒவியம் ஆகிய கலைகளில் பயிற்சிக் கூடமாக, கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப் பெறும் அரங்காகப் பயன்பட்டு வந்துள்ளன. ஆதலால் திருக்கோயில் கருவறைச் சுவர்கள். அதிட்டான நுழைவு வாயில், கொடிமரம் போன்ற இடங்களில் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்ட அறக்கொடைகள். மகாசபையின் திர்ப்பானை, மன்னரது மெய்க்கிர்த்தி போன்ற செய்திகள் கல்வெட்டுக்களாகப் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருக்கோயில் அமைந்துள்ள ஊர். அந்தப்பகுதி பற்றிய வரலாறுகளைத் தொகுப்பதற்கு இந்தக் கல்வெட்டுகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. ஆனால் இராமேசுவரம் திருக்கோயிலைப் பொறுத்தவரையில் ஒரு சிறிது மாற்றமாகவுள்ளது. ஏறத்தாழப் பன்னிரண்டு நூற்றாண்டுக் காலப் பழமையுடையதாக இந்தத் திருக்கோயில் இருப்பதால் பாண்டிய, சோழ நாயக்க, சேதுபதி மன்னர்களது அறக்கொடைகள் மற்றும் இராமேசுவரம் திவுப் பகுதி பற்றிய செய்திகள் பல இடங்களில் பதிவு செய்து இருத்தல் வேண்டும் ஆனால் தற்போது அங்கு உள்ள கல்வெட்டுக்கள் மிகவும்