பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|54 இராமர் செய்த கோயில் இவைகளைவிட இன்னுமொரு சிறப்பான செய்தி. கி.பி. 19-ம் நூற்றாண்டில் இராமேசுவரம் சுல்தான் மரைக்காயர் என்பவர் திருக்கோயில் அறங்காவலராக இருந்தார் என்பதும் அவரது பொறுப்பில் கோயில் கருவூலம், திருவாபரணம் ஆகியன இருந்து வந்தன என்பதுமாகும். இவையெல்லாம் பழைய செய்திகளாக இருந்தாலும், இன்றும் இராமேசுவரத்தில் நிலவிவருகின்ற சமரச சமய நல்லிணக்க சூழலுக்குப் பக்கவேர்களாக இருந்து வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 3) அகம்படியர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினரான இந்த மக்கள் பெரும்பாலும் இராமேசுவரம் திருக்கோயிலைச் சார்ந்து வாழ்கின்றார்கள். பூஜை, ஸ்தானிகம். பரிச்சாரகம் ஆகிய பணிகளைத் தவிர்த்து. ஏனைய கோயில் பணிகள் அனைத்திலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். யாத்ரீகர்களுக்குக் கோடி திர்த்தம் வழங்குதல் பூசைக்கான சிட்டு வழங்குதல். கோயில் பிரசாதம் விற்றல். சன்னதிகளில் பக்தர்கள் போக்குவரத்தைச் சிர்படுத்துதல், வீடுகளில் பயணிகளை தங்க வைத்து வாடகை வசூலித்தல் போன்ற சிறு பணிகள் அனைத்தையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர். தெய்வத் திருமேனிகள் வீதி உலா, திருவிழாவிற்கு எழுந்தருளல், மண்டகப்படி ஆராதானைகள் அனைத்திலும் இந்த மக்களது பங்கு மிகுதி. கோயில் பணியாளர்களில் மிகுதியான பேர் இந்த மக்களே. ஒருசிலர் கோயில் யாத்ரீகளுக்குத் தேவையான சங்கு, மணிமாலைகள். உருத்திராட்சம் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளாகவும் s» 6íTörraúrfT. நானு று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களது மூதாதையரில் ஒருவரான முத்துவிஜயன் சேர்வை என்பவர்