பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |55 மிகுந்த உடல் வலிமை பெற்றவராகத் திகழ்ந்தார். ஆனால் வாழ்க்கையில் நலிவு ஏற்பட்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்த சமயம் போகலுரில் இருந்து கூத்தன் சேதுபதி மன்னர் இராமேசுவரத்திற்கு வந்தார். அவரை நேரில் அணுகி தமது இடர்ப்பாடுகளை எடுத்துச் சொல்ல அவருக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. அவரது வீதிபக்கம் சேதுபதி யானை மீது பவனி வருவதைத் தெரிந்து முத்து விஜயன் சேர்வை கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்த யானையின் அருகில் சென்று அதன் வாலைப்பிடித்து தனது வலிமையனைத்தையும் சேர்த்து இழுத்தார். யானை காலை நகர்த்தி ஒரு அங்குலம் கூட நடக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டது. நிலைமையை அறிந்த மன்னர் சற்றும் பதட்டமோ கோபமோ கொள்ளாமல் சேர்வைக்காரரிடம் பரிவுணர்வுடன் அவரது செயலுக்கு காரணம் யாது என வினவினார். தமது வறிய நிலையை மன்னருக்கு அறிவிக்கவே இந்த நேரடி நடவடிக்கை என்பதைச் சொன்னவுடன், சேர்வைக்காரருக்கு நாள்தோறும் இருவேளை உணவு இலவசமாக கோயிலில் இருந்து வழங்க அந்த இடத்திலேயே மன்னர் உத்திரவிட்டார்.' யானை பவனி தொடர்ந்தது. இந்த நிகழ்ச்சி நடைபெற்றது கி.பி. 1628இல் ஆகும். 4) மீனவர்கள் இங்குள்ள தொன்மையான குடிகளில் இவர்களும் இடம் பெறுகின்றனர். கடலில் மீன்பிடிதொழிலில் ஈடுபட்டவர்கள் கரையர். கடையர், பரவர். படையாட்சி என வழங்கப்பட்டனர். தற்போது இந்தத் தொழில் மேற்கொண்டு இருக்கும் இந்து சமயத்தினர் முத்தரையர் என வழங்கப்படுகின்றனர். 1) சென்னை அருங்காட்சியத்திலுள்ள கி.பி. 1628 ஆம் ஆண்டு சேதுபதி செப்பேடு