பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 64 இராமர் செய்த கோயில் தஞ்சை, சிதம்பரம் ஆகிய ஊர்களிலுள்ள திருக்கோயில்களைக் கொள்ள லாபம். பிற்காலப் பாண்டியர்களும் சேதுபதி மன்னர்களும் இத்தகைய ஏழு நிலை கோபுரங்களை அமைத்துள்ளனர். திருஉத்திரகோசமங்கை, காளை யார் கோவில். திருவாடானை ஆகிய திருக்கோயில் இராஜகோபுரங்களைச் சேது மன்னர்கள் அமைத்திருப்பதை காணலாம். மன்னர் பாஸ்கர சேதுபதியினைத் தலைவராகக் கொண்ட இராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழு இந்தத் திருப்பணியைத் தொடங்கியது. ஒரு வகையாக கி.பி. 1902ல் தேவகோட்டை ஜமீன்தாராகிய திரு.கே.ஏ.எல்.ஏ.ஆர். இராமசாமி செட்டியார் அவர்களது பெரு முயற்சியாலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களது ஒத்துழைப்பினாலும் இந்த இராஜகோபுரத்தின் முதலாவது குடமுழுக்கு 1903-ல் சிறப்பாக நடந்தேறியது. இதனையடுத்து கி.பி.1925. கி.பி.1967. கி.பி.2001 ஆகிய வருடங்களில் மூன்று குடமுழுக்குகள் இந்த கோபுரத்திற்கு நடத்தப் பெற்றுள்ளன. இராமேஸ்வரம் திருக்கோயிலின் சுவாமி சன்னதிக்கு செல்லும் வாசல் பகுதியில் இந்தக் கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. சுமார் 150 அடி உயரத்தில் ஏழு நிலை மாடங்களையும் கோபுரத்தின் உச்சியில் ஏழு செப்புக் கலசங்கல் பொருத்தப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்கினி திர்த்தக்கரை நோக்கியவாறு கிழக்கில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த அமைப்பு புராணக் காட்சிகளைச் சித்தரிக்கும் சுண்ணாம்பு சுதை உருவங்களுடன் வர்ணங்கள் சேர்த்து அழகாகக் காட்சியளிக்கும் நிலையில் திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. 4) மூன்றாவது பிரகாரம் இராமேஸ்வரத் திருக்கோயில் அமைப்பில் சிறப்பாக விளங்குவது இங்குள்ள மூன்றாவது பிரகாரம் ஆகும். இந்தக் இராம - 12