பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | (55 கோயிலின் அமைப்பைப் போலவே செவ்வக வடிவத்தில் கிழமேலாக சுமார் 840 அடி நீளமும் தென்வடலாக சுமார் 630 அடி நீளமும் உள்ளது. இப்பிரகாரத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு வாயில்களுக்கான நடைபாதையும் இடப்பட்டுள்ளது. இந்தப் பிரகாரத்தின் ஒரு கோடியிலிருந்து அடுத்த கோடியினைப் பார்த்தால் இந்தப் பிரகாரத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 2168 து னகளின் அமைப்பு காரணமாக ஒரே மாதிரியான தோற்றம் ஏற்படுவது இந்தக் கட்டுமானத்தின் சிறப்பு ஆகும். இந்தப் பிரகாரத்தின் நடைபாதைகள் இருபுறமும் எட்டு அடி உயர திண்ணையும் அதற்கு மேலே வரிசையாக 15 அடி உயர கல்துரண்களும் நாட்டப்பட்டுத் துண்களுக்கு மேலே பொதிகை. யாளி அமைப்புகளும் அதற்கு மேலாக மூடு பலகையாக கற்பாளங்களும் நிறுவப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்தப் பிரகாரத்தின் உயரம் தரையிலிருந்து 31 அடியாகவும் அகலம் 21 அடியாகவும் ஒரே சிராக அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நீண்ட பிரகாரம் தமிழ்நாட்டிலுள்ள பழமை பொருந்திய மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம், பூரீரங்கம் ரங்க நாதப் பெருமாள் ஆலயம். சிதம்பரம் நடராஜர் ஆலயம், காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் ஆகியவைகளில் கூட அமைக்கப்படவில்லை. உண்மையில் இந்தியாவில் உள்ள வேறு எந்தக் கோவிலிலும் இத்தகைய நீண்ட கட்டுமான அமைப்பு இல்லை. இந்தப் பிரகார அமைப்பினைக் கண்டு அதிசயித்த மேனாட்டு அறிஞர்கள் இதனை உலகத்தின் எட்டாவது அதிசயம் எனப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். கிபி 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு வருகை தந்த பெர்கசன் என்ற பேரறிஞர் இதற்கு ஒப்பாக இந்தியாவிலும் கிழை. மேலை நாடுகளிலும் எந்த அமைப்பும் இல்லை என அறுதியிட்டுக் கூறியுள்ளார்.