பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் -X 1) வரலாற்றில் பதிவு பெற்றுள்ள இராமேஸ்வரத்து வருகைகள் திரேதாயுகத்தின் யுகதர்மத்தை நிலை நிறுத்துவதற்காக திருமால் அயோத்தியில் மானிடப் பிறவியில் அவதரித்தான். தய ரத சக்கர வர்த்தியின் மூத்த திருமகனாக - இராம பிரானாகத் தோன்றினான். அரக்கர்களின் பாவத்தை அழித்து ஒழிக்க மறவுரி அணிந்து மனைவி சிதையுடனும் தம்பி இலக்குவனுடனும் தண்ட காரணியம். பஞ்சவடி கிஷகிந்தை. மகேந்திர புரி ஆகிய பாரத நாட்டில் பல இடங்களுக்கும் சென்று இறுதியில் இலங்கையில் இராவணனை அழித்து ஊர் திரும்பினான் என்பது இராமகாதை தருகின்ற விவரங்கள் ஆகும். இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இராமரது சிறந்த பணிகளாகக் குறிக்கப் பெறுவது இராவணனை அழிக்கக் கடல் அடைத்து சேது என்ற திருஅணையை அமைத்ததும் இராமேஸ்வரம் கடற்கரையில் பாவ விமோசனத்திற்காக சிதாப்பிராட்டியுடன் இணைந்து சிவலிங்கப் பிரதிட்டை செய்ததும் ஆகும். இவைகளை யெல்லாம் படித்து உணர்ந்த மக்கள் மனநிறைவு கொள்ளாமல் சேது அணையையும் இராமேஸ்வர சிவலிங்க பிரதிட்டையையும் நேரில் கண்டு தரிசித்து உய்வு பெற வேண்டும் என்ற உந்துதலினால் பல நூற்றாண்டுகளாக வடக்கிலும் தெற்கிலும் இருந்து சேது யாத்திரையை மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதை வரலாறு