பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |7 | முதலாவது சங்கர மடமாகிய சிருங்கேரி மடத்தைச் சார்ந்த ஜகத்குரு நரசிம்ம பாரதி ஆவார். இரண்டாமவர் உலகப் புகழ் பெற்ற சுவாமி விவேகானந்தர் என்ற புனிதத் துறவி ஆவார். சிருங்கேரி மடாதிபதியைப் பற்றிய வேறு செய்திகள் எதுவும் கிடைக்கவில்லையென்றாலும் சுவாமி விவேகானந்தரைப் பற்றிய செய்திகளும் அவர் இராமேஸ்வரம் திருக்கோயிலில் பக்த கோடிகளிடையே ஆற்றிய சொற்பொழிவும் நமக்கு கிடைத்துள்ளன. அவைகளின் சுருக்கத்தை கிழே காணலாம். கொழும்பு வழியாக 22.1.1897 ல் இராமநாதபுரம் மன்னரது பாம்பன் துறை முகத்தில் வந்து சேர்ந்தார். சேதுபதி மன்னரும் சேது நாட்டு மக்களும் வழங்கிய பெரும் வரவேற்பில் கலந்து கொண்டு மூன்று நாட்கள் மன்னரது விருந்தினராகப் பாம்பன் மாளிகையில் தங்கியிருந்தார். மூன்றாவது நாளான 24.1.1897ல் இராமேஸ்வரம் நகருக்கு விஜயம் செய்தார். பொது மக்களது ஆர்வமிக்க வரவேற்பினால் மனம் நெகிழ்ந்த சுவாமிகள் திருக்கோயிலில் இராமநாத சுவாமியின் தரிசனத்தை முடித்துவிட்டு கூடியிருந்த பக்தகோடிகளிடம் பயனுள்ள சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். இறைவனது சிருஷ்டியாகிய மக்களிடத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனையும் பக்தியும் எழுவது இயல்பாகும். அந்த பக்தி எவ்விதம் அமைதல் வேண்டும். எப்படி மனித வாழ்க்கையுடன் ஒன்றியிருத்தல் வேண்டும் என்பதைச் சுவாமிகள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். அந்த சொற்பொழிவின் சுருக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மதம் என்பது அன்பில் அமைந்துள்ளது இதயத்தின் துய்மையான உண்மையான அன்பில் தானே தவிர சடங்குகளில் இல்லை. உடலாலும் மனத்தாலும் துய்மையாக இல்லாமல் ஒருவன் கோயிலுக்கு வருவதும் சிவபெருமானை