பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இலக்கியங்களில் இராமேஸ்வரம் பனி படர்ந்த காஷ்மீரில் இருந்து பகலிரவாக அலை முழங்கிக் கொந்தளிக்கும் குமரித்துறை வரை பரந்து விரிந்துள்ள இந்தப் பாரத கண்டத்தில் வாழும் மக்களைச் சாதி. இனம், குலம், மொழி என்ற பிரிவினை வேலிகளுக்கு அப்பால் இருந்து அவர்களது இதயங்களை ஆன்மீகத்தில் ஈர்த்து இணைக்கச் செய்யும் ஒரே கதை இராமாயனக் கதையாகும். ஆதலால் இந்த இணையற்ற காவியம் நமது தமிழ் இலக்கியங்களிலும் ஊடுருவி இணைந்து இருப்பதில் வியப்பு இல்லையல்லவா? இதன் காரணமாக இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இராமாயனக் கதை பற்றிய செய்திகள். சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு இடம் பெற்று உள்ளன. சிதாப் பிராட்டியைக் கவர்ந்த இராவணன் புட்பக விமானம் மூலம் வான்வழி இலங்கைக்குச் சென்றபொழுது. அலமருந்த பிராட்டியார் தான் அணிந்து இருந்த அணிமணிகளைக் கழற்றிக் கிழே விட்டெறிந்தவாறு சென்றார் இப்படிச் செய்தமை அவரைத் தேடி அலையும் இராமனது கண்களில் ஒரு வேளை, அவை பட்டு அவள் சென்றுள்ள திக்கைத் தெரிவிக்க உதவும் என்ற நினைப்பில் ஆனால் அவைகளைக் கண்டெடுத்த வான ரங்கள் அவைகளைப் பொருத்தமற்ற முறையில் அணிந்து கொண்டன : இந்தக் காட்சியினை புறநானுற்றுப் புலவர் ஒருவர் பாடல் ஒன்றில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளார்.