பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இராமர் செய்த கோயில் “கருந்தேரி ராமன் உடன் புனர் சிதையை வலித்தகை யரக்கன் வவவிய நாள் நிலம் சேர் மாதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழைப் பொலிந்தாங்கு அறா அருநகை யின்று பெற்றிடுமே” அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும், இராமன் பற்றிய நிகழ்ச்சி ஒன்று உவமையாகக் கையாளப்பட்டுள்ளது. இராமபிரான் கடற்கரையையடுத்த அடர்ந்து பரந்து நின்ற ஆலமரத்தின் நிழலில், கடலைக்கடந்து இலங்கைக்கு செல்வது பற்றி வானர வீரர்களுடன் ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டு இருந்தார். அதற்கு இடையூறாக ஆலமரத்தில் இருந்த பறவைகளின் ஆரவார ஒலி அமைந்து இருந்தது. அந்த ஒலியை இராமபிரான் கையமர்த்தி அடங்கச் செய்தார் என்பது ஒரு செய்தி. ஒரு ஊரில் களவு மனத்தில் ஈடுபட்டு இருந்த தலைவன் தலைவி பற்றியெழுந்த அலர் (வசை) அடங்கியதற்கு ஒப்புவமையாகச் சங்கப் புலவர் இந்த நிகழ்வினைக் கையாண்டுள்ளார். "வெவ்வேல் கவுரியர் தொல்முறு கோடி முழங்கி வரும் பெளவம் இரங்கு மூன்றுறை வெல் போரி ராமன் அருமறை அவித்த பல் மூலம் போல i ஒலியவிந் தன்றாவில் அழுங்கல் ஊரே” == (1) ங் : குரங்கு தென் குமரியம் பெருந்துறையில் பரந்து சென்று. 2( ה, יי) மகாவித்வான் மு. ராகவ ஐயங்கார் ஆராய்ச்சித் தொகுதி இதனைப் போன்று சமணக் காப்பியமான 1). புறநானூற்றுப் பாடல் - 378 2) அகநானூறு பாடல் எண். 70 3) பணிமேகலை 5133 - 38