பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 2 3. சிலப்பதிகாரத்தில் இராமன் இல்லாத அயோத்தி மாநகரம் என்ற :חו ההווה י ஆளப்பட்டுள்ளது என்பதனை எடுத்துக்காட்டியுள்ளார். “அருந்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும் பெயர் மூதுர் பெரும் பேதுற்றதும்” என்பது அந்தத் தொடர். ' (3) மேலும் இந்தச் செய்திகள் ஆதி காவியமாகிய வால்மீகியின் இராமாயணத்திலும் காணப்படாதவையென்று அறியும்பொழுது நமக்கு வியப்பு ஏற்படுகிறது. வால்மீகியின் இராமாயணம் தமிழக மக்களின் வழக்கிற்கு வரு முன்னர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தச் செய்திகள் தமிழகத்தில் பரவியிருந்தன என்பது தெளிவு. இவ்விதம் இராம கதையின் நாயகனான இராமபிரானைப் பற்றிய செய்திகள் கடைச் சங்க காலத்தை அடுத்த நூற்றாண்டுகளிலும் இடம் பெற்று வந்துள்ளன. கி.பி. ஐந்து. ஆறாவது நூற்றாண்டில் பெளத்த இலக்கியமான மணிமேகலையில் இலங்கை செல்வதற்கு இராமனது வானரப் படைகள் கற்களைக் கொண்டு கடலில் அணைகட்டியமைத்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதம் இராம சரித்திரத்தில் இறுதிக் களமாகிய யுத்த காண்டத்தில் இராமபிரான் இலங்கைப் படையெடுப்பிற்குக் கடலடை த்து அணைக்கட்டியது. இலங்கையில் இராவன சம்ஹாரத்தை முடித்து தாயகம் திரும்பிய வழியில் இராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து. மகாதேவரை மனம் ஒன்றி சிதாப்பிராட்டியுடன் வழிபட்டது ஆகிய இராமேசுவரம் பகுதி நிகழ்ச்சிகளும் தமிழ் இலக்கியங்களில் இடம் பிடித்துள்ளன. சைவ, வைணவர் ஆகிய இரு பிரிவுப் புலவர் பெருமக்களது படைப்புக்களிலும் இந்த நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டுள்ளன.