பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 39 அடுத்த செய்தி பிற்காலப் பாண்டியரது ஆட்சிக் காலத்தியது. அண்மையில இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடி வட்டம், சதுர்வேதி மங்கலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள கோனேரின்மை கொண்டான் என்ற பாண்டியனது இருபத்து இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு கி.பி.1216-43 வரை மதுரை மண்டலத்தை ஆட்சி செய்த தஞ்சையும் உறந்தையும் செந்தமுல் கொளுத்திய மாவீரன் இவனது முழுப் பெயர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பது “பூ மடந்தையும். ஜெயமடந்தையும் புனர” என்று தொடரப் பெறும் மெய்க்கிர்த்திக்குரியவன். மலை மண்டலத்தைச் சேர்ந்த வீரநாராயணன் என்ற அந்தன ன் கோடி நாட்டு இராமேஸ்வரத்தில் நடத்திய சுந்தரபாண்டிய மடத்திற்கு அக்கிரமேசி சதுர்வேதி மங்கலத்தில் 12 வேலி விளை நிலத்தைத் தானமாகப் பெற்றதாகும். ஆனால் இந்தச் செய்திக்கு முன்னதாகத் தமிழக வரலாறும் இலங்கை நாட்டு வரலாறும் ஒரு சேர உறுதி செய்கின்ற நிகழ்ச்சி ஒன்று உள்ளது. கி.பி. 1168-இல் மதுரையைக் கைப்பற்றிப் பாண்டியப் பேரரசனாவதற்கு குலசேகரன் முயன்றான். இதனை அறிந்த மதுரை மன்னன் பராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவிடம் உதவி கோரினான். இலங்கை உதவி கிடைப்பதற்கு முன்னர் குலசேகரன் பராக்கிரம பாண்டியனைக் கொன்று மதுரைக்கு அதிபதியானான். அத்துடன் பராக்கிரமனது மகன் வீரபண்டியனுக்கு உதவ வருகின்ற இலங்கைப் படைகளை எதிர்கொண்டு போரிடுவதற்கு இராமேஸ்வரம் திவிலும் கிழக்குக் கடற்கரையிலும் தக்க முன் நடவடிக்கைகள் எடுத்தான். கி.பி.1169 இளவேனில் காலத்தில் இலங்கை மன்னர் பராக்கிரமபாகுவின் பெரும்படை நூற்றுக்கணக்கான