பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 鬱 91 鑑 நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன் சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே நெஞ்சடைமேல் பாதிநிலா ஒங்கும் பரமேநீ ஒற்றிநகர் வீதிஉலா வந்தஎழில் மெங்குளிரக் கண்டிலனே (10) என்பவை இப்பதிகத்தின் மூன்று பாடல்கள். பாடல் களில் ஆழங்கால்பட்டு அநுபவிக்கும்போது நம்மிட மும் அத்துடிப்பு எழுவது போன்ற உணர்வு ஏற்படு வதை உணர்கின்றோம். . . . . . . . . 60. திருஅருட்கிரங்கல்: திருவொற்றியூர் அப்பனின் திருவருள் தம்மீது பொழிய வேண்டும் என்று இப்பதி கத்தால் வேண்டுகின்றார். கொச்சகக் கலிப்பா யாப்பால் அமைந்த பத்துப் பாடல்களில் இந்த ஏக்கத்தைக் காண் கின்றோம். ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என் அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும் தப்பாதகமலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற இப்பாதகத்தேற் கிரங்கினால் ஆகாதோ (1) பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றார் செய்தபெருங் குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே - மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ (3) முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம் தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே எத்திக்கும் இல்லேன் இளைப்பொழிந்தால் ஆகாதோ (7)